இன்று ஒரே நாளில் இரண்டு அதிமுக எம்.எல்.ஏக்களுக்கு கொரோனா!

  • IndiaGlitz, [Saturday,September 12 2020]

இன்று ஒரே நாளில் இரண்டு அதிமுக எம்எல்ஏக்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

தமிழகத்தில் கடந்த சில மாதங்களாக கொரோனா வைரஸின் தாக்கம் அதிகரித்துக் கொண்டே வரும் நிலையில் ஏற்கனவே அதிமுக, திமுக மற்றும் காங்கிரஸ் எம்பி, எம்எல்ஏக்கள் சிலர் கொரோனாவால் பாதிப்பு ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர் என்பதும், அதில் ஒரு சிலர் கொரோனாவில் இருந்து மீண்டு வீடு திரும்பியுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் இன்று காலை வெளியான தகவலின்படி செய்யாறு அதிமுக எம்எல்ஏ தூசி மோகன் என்பவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனை அடுத்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்த நிலையில் சற்று முன் வெளியான தகவலின்படி தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அதிமுக எம்எல்ஏ எஸ்பி சண்முகநாதன் என்பவருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து அவர் தனது வீட்டில் தன்னைத்தானே தனிமைப்படுத்தி கொண்டு சிகிச்சை பெற்று வருவதாக செய்திகள் வெளியாகி உள்ளது

இன்று ஒரே நாளில் 2 அதிமுக எம்எல்ஏக்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதால் அதிமுகவினர்களிடையே பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

இந்த நிலையில் சட்டமன்ற கூட்டத்தொடர் விரைவில் தொடங்கவிருக்கும் நிலையில் அனைத்து எம்.எல்.ஏக்களுக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம், எதிர்க்கட்சி தலைவர் முக ஸ்டாலின் ஆகியோர்களுக்கு கொரோனா தொற்று இல்லை என்பது உறுதியாகியுள்ளது.

More News

15 வருஷமா துணையை திரும்பிக்கூட பார்க்காத மலைப்பாம்பு… 7 முட்டைகள் ஈன்ற விசித்திர சம்பவம்!!!

அமெரிக்காவில் கடந்த 15 வருடங்களாக எந்த ஆண் மலை பாம்புடனும் தொடர்பே இல்லாத பெண் மலைப்பாம்பு ஒன்று 7 முட்டைகளை ஈன்ற விசித்திரச் சம்பவம் நடைபெற்று இருக்கிறது.

பிரபல பாடகியின் உறவினரை அறிமுகம் செய்த டி.இமான்: யார் தெரியுமா?

இசையமைப்பாளர் டி இமான் அவ்வப்போது திறமையான பாடகர்களை இனம்கண்டு தான் இசையமைக்கும் படத்தில் அறிமுகம் செய்து வருகிறார் என்பது தெரிந்ததே

ஜோதி ஸ்ரீதுர்காவின் மரணமே இறுதி மரணமாக இருக்க செய்யப்போவது என்ன? கமலஹாசன்

நீட்தேர்வு அச்சம் காரணமாக ஏற்கனவே கோவையைச் சேர்ந்த சுபஸ்ரீ, அரியலூரை சேர்ந்த விக்னேஷ் ஆகிய இருவர் சமீபத்தில் தற்கொலை செய்துகொண்ட

தளபதி விஜய்யின் 'மாஸ்டர்' ரிலீஸ் குறித்த லேட்டஸ்ட் தகவல்! ரசிகர்களிடையே பரபரப்பு

தளபதி விஜய் நடித்த 'மாஸ்டர்' திரைப்படம் கடந்த ஏப்ரல் 9ம் தேதியே ரிலீஸ் செய்ய திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் திடீரென மார்ச் இறுதியில் கொரோனா வைரஸ் காரணமாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டதை

நாளை நீட் தேர்வு எழுதாமல் விட்டால் மறுவாய்ப்பு இல்லை… உச்ச நீதிமன்றத்தின் அதிரடி!!!

இந்தியா முழுவதும் நாளை (செப்டம்பர் 13) நீட் தேர்வு நடைபெற இருக்கிறது. இதற்கான விதிமுறைகளை தேசிய தேர்வு முகமை வெளியிட்டு இருந்தது.