நிவாரண உதவியாக ரூ.1 கோடி உதவித்தொகை கொடுத்த '2.0' பட நடிகர்

பீகார் மாநிலத்தில் அக்டோபர் முதல் வாரம் கனமழை கொட்டித் தீர்த்தது. குறிப்பாக தலைநகர் பாட்னாவில் ஒரு வாரம் விடாமல் மழை பெய்ததால் தாழ்வான பகுதிகள் தண்ணீர் சூழ்ந்து வெள்ளக்காடாக காட்சியளித்தது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. தண்ணீர் சூழ்ந்த பகுதிகளில் இருந்து படகுகள் மூலம் மக்கள் மீட்கப்பட்டதாகவும், பாட்னாவில் மட்டும் பல்லாயிரம் மக்கள் பத்திரமாக மீட்கப்பட்டதாகவும் செய்திகள் வெளிவந்தன. இருப்பினும் கோடிக்கணக்கில் பொருட்சேதம் ஏற்பட்டது.

இந்த நிலையில் பிரபல பாலிவுட் நடிகரும் ரஜினியின் ‘2.0’ படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்தவருமான அக்சய்குமார், பீகாரில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவியாக ரூ.1 கோடி அளித்துள்ளார்.

இந்த ஒரு கோடி ரூபாய் பணம், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 25 குடும்பங்களுக்கு தலா ரூ.4 லட்சம் என பிரித்து கொடுக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. அக்சயகுமாரின் இந்த உதவிக்கு பீகார் மக்கள் தங்களுடைய நன்றியை தெரிவித்து வருகின்றனர்.
 

More News

சுஜித் மரணம் குறித்து ரஜினிகாந்த் டுவீட்!

திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகேயுள்ள நடுக்காட்டுப்பட்டியை சேர்ந்த 2 வயது சுஜித்தின் இழப்பை இன்னும் தமிழக மக்களால் ஜீரணித்து கொள்ள முடியவில்லை.

இது ஒரு தேவை இல்லாத உயிரிழப்பு: லதா ரஜினிகாந்த்

இரண்டு வயது சுஜித் ஆழ்துளையில் உயிரை விட்ட துயரமான சம்பவம் தமிழகத்தை மட்டுமின்றி ஒட்டுமொத்த இந்தியாவையே உலுக்கிவிட்டது. இந்த ஒரு உயிரிழப்பிற்கு

சுஜித் செய்தியை பார்த்து கொண்டிருந்த தம்பதியின் 2 வயது மகள் மரணம்!

திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே நடுக்காட்டுப்பட்டி என்ற பகுதியில் இரண்டு வயது சுஜித் என்ற சிறுவன் மூடப்படாத ஆழ்துளை கிணற்றில் விழுந்து பலியான சோகம் தமிழகத்தையே கண்ணீர் கடலில் ஆழ்த்தியுள்ளது 

ரஜினி-கமல்-விஜயகாந்த்-பாஜக கூட்டணி: ஒரு நடிகரின் யோசனை

தமிழக சட்டமன்ற தேர்தல் இன்னும் ஒன்றரை வருடங்கள் மட்டுமே இருக்கும் நிலையில் இப்போதே அரசியல் கட்சிகள் தேர்தலுக்கு தயாராகி வருகின்றன.

நாம் அனைவருமே குற்றவாளிகள்: சுஜித் மரணம் குறித்து உதயநிதி

மணப்பாறை அருகே உள்ள நடுக்காட்டுப்பட்டி என்ற கிராமட்த்தை சேர்ந்த சிறுவன் சுஜித் மூடப்படாமல் இருந்த ஆழ்துளை கிணற்றில் விழுந்து நான்கு நாட்களுக்கு பின் பிணமாக