'தக்ஸ் ஆப் இந்தோஸ்தான்' முதல் நாள் சாதனையை '2.0 முறியடிக்குமா?

  • IndiaGlitz, [Wednesday,November 28 2018]

இந்தியாவில் இதுவரை முதல் நாளில் அதிக வசூல் செய்த திரைப்படமாக 'தக்ஸ் ஆப் இந்தோஸ்தான்' சாதனை புரிந்துள்ளது. இந்த படம் முதல் நாளில் ரூ.50 கோடி வசூல் செய்துள்ளது. இந்த நிலையில் இந்த சாதனையை நாளை வெளியாகவுள்ள ரஜினியின் '2.0' முறியடிக்குமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

திருவிழா நாளில் '2.0' படம் வெளியாகவில்லை என்றாலும் ரஜினி படம் வெளியாகும் நாளே திருவிழா என்பதால் இந்த படத்தின் முதல் நாள் வசூல் பிரமாண்டமாக இருக்கும் என கருதப்படுகிறது. தமிழ் தெலுங்கு மற்றும் இந்தி ஆகிய மூன்று மொழிகளிலும் சேர்த்து இந்த படத்தின் முதல் நாள் வசூல் ரூ.50 கோடியை தாண்டும் என கணிக்கப்பட்டுள்ளது

புக் மை ஷோ இணையதளத்தில் மட்டுமே இந்த படத்திற்காக 1 மில்லியன் டிக்கெட்டுக்கள் முன்பதிவு செய்யப்பட்டுள்ளதாக ஒரு தகவல் வெளிவந்துள்ளது. இதுவரை எந்தவொரு படமும் செய்யாத சாதனை இது என்பது குறிப்பிடத்தக்கது

இந்த உலகம் மனிதர்களுக்கு மட்டுமின்றி விலங்குகள், பறவைகளுக்கும் ஆனது என்ற கருத்தை வலியுறுத்தும் இந்த படம், இதுவரை உலக அளவில் யாரும் தொடாத செல்போனினால் ஏற்படும் பிரச்சனைகள் குறித்த கதையை அலசியுள்ளது. எனவே இந்த படத்தின் கதை ரசிகர்களை கவர்ந்துவிட்டால் நிச்சயம் வசூலில் மிகப்பெரிய சாதனை செய்ய வாய்ப்பு உள்ளது.

More News

தற்கொலை செய்து கொண்ட ஃபேஸ்புக் காதல் ஜோடி: உருக்கமான கடிதம்

ஃபேஸ்புக்கில் பழகி காதலித்த காதல் ஜோடி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் ஈரோடு அருகே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தளபதி 63: இன்று முதல் தொடங்கிய முக்கிய பணி

தளபதி விஜய் நடிக்கவுள்ள அடுத்த படமான 'தளபதி 63' படத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பு கடந்த சில நாட்களுக்கு முன்னர் வெளியானது என்பது தெரிந்ததே.

மன்னிப்பு கேட்க முடியாது, உத்தரவாதமும் தரமுடியாது: ஏ.ஆர்.முருகதாஸின் தைரியமான முடிவு

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கிய 'சர்கார்' படத்தில் அரசின் விளம்பர பொருட்களை விமர்சிக்கும் வகையில் காட்சி இருந்ததால் அந்த காட்சிகளுக்கு அதிமுக தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.

என்னை பாஜகவில் இருந்து நீக்க தமிழிசைக்கு உரிமையில்லை: காயத்ரி ரகுராம்

சமீபத்தில் நடிகை காயத்ரி ரகுராம் போதையில் கார் ஓட்டியதாக சர்ச்சை எழுந்தது. இதற்கான விளக்கத்தை காயத்ரி தெளிவாக கூறிவிட்டபோதிலும் தொடர்ந்து இதுகுறித்த சர்ச்சைக்குரிய கருத்துக்கள் பரவி வருகிறது.

திரைப்படம் ஆகிறது சந்திரபாபு வாழ்க்கை வரலாறு

எம்.ஜி.ஆர், சிவாஜி காலத்தில் புகழ் பெற்ற நகைச்சுவை நடிகராகவும், ஹீரோவாகவும் தமிழ் சினிமாவில் இருந்தவர் நடிகர் சந்திரபாபு.