ரஜினி ரசிகர்களுக்கு ஒரே நாளில் டபுள் விருந்து

  • IndiaGlitz, [Friday,September 07 2018]

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கி வரும் 'ரஜினி 165' படத்தின் டைட்டில் மற்றும் மோஷன் போஸ்டர் இன்று மாலை 6 மணிக்கு வெளியாகும் என்ற அறிவிப்பு வெளிவந்துள்ளதால் ரஜினி ரசிகர்கள் மிகுந்த ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

இந்த நிலையில் ரஜினி நடித்து முடித்துள்ள '2.0' படத்தின் டீசர் வரும் 13ஆம் தேதி வெளியாகும் என்ற அறிவிப்பு சற்றுமுன் வெளியாகியுள்ளது. இதனால் இன்று ஒரே நாளில் ரஜினி ரசிகர்களூக்கு டபுள் விருந்து கிடைத்தது போல் உள்ளது.

வரும் நவம்பர் 29ஆம் தேதி வெளியாகவுள்ள '2.0' படத்தில் ரஜினிகாந்த், அக்சய்குமார், எமி ஜாக்சன், சுதான்ஷி பாண்டே, அதுல் ஹூசைன், ரியாஸ்கான் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். லைகா நிறுவனம் சுமார் ரூ.500 கோடி பட்ஜெட்டில் 3D தொழில்நுட்பத்தில் தயாரித்துள்ள இந்த படம் நீரவ் ஷா ஒளிப்பதிவில் அந்தோணி படத்தொகுப்பில் உருவாகியுள்ளது.

More News

'தலைவர் 165' படத்தின் டைட்டில் ரிலீஸ் குறித்த அறிவிப்பு

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் 'தலைவர் 165' படத்தின் இரண்டுகட்ட படப்பிடிப்புகள் முடிவடைந்து தற்போது

மாணவிகளின் குளியல் வீடியோவை எடுக்க உதவிய சக மாணவி: பெங்களூரில் தஞ்சை இளைஞர் கைது

பெங்களூரில் உள்ள ஒரு கல்லூரியில் ஹாஸ்டலில் உடன்படிக்கும் மாணவிகளின் குளியல் வீடியோவை ஒரு மாணவியின் உதவியுடன் எடுத்து ஃபேஸ்புக்கில் பதிவு செய்த தஞ்சையை சேர்ந்த இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார்.

தப்பை தப்புன்னு ஒத்துக்கோங்க: மும்தாஜிடம் மோதிய விஜி

பிக்பாஸ் வீட்டில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் மகத் தினமும் யாரிடமாவது சண்டை போடுவார். அந்த வகையில் தற்போது மும்தாஜ் தினமும் யாரிடமாவது சண்டை போட்டு வருகிறார்.

அபிராமி கணவருக்கு முக்கிய பதவி கொடுத்த ரஜினிகாந்த்

சென்னை குன்றத்தூர் பகுதியை சேர்ந்த அபிராமியின் கணவர் விஜய்யை நேரில் அழைத்த ரஜினிகாந்த் அவருக்கு ஆறுதல் தெரிவித்தார் என்பது தெரிந்ததே

விஜய்சேதுபதிக்கு கிடைத்த கமல் வகித்த பதவி

கடந்த ஐந்து ஆண்டுகளாக நடைபெற்று வரும் இந்த புரோ கபடி போட்டி இவ்வாண்டு ஆறாவது ஆண்டாக அடுத்த மாதம் முதல் தொடங்கவுள்ளது.