வீட்டுக்கு வா என அழைத்த காதலன்; நம்பி போன காதலிக்கு ஏற்பட்ட விபரீதம்!

  • IndiaGlitz, [Monday,December 23 2019]

வீட்டுக்கு வா என அழைத்த காதலனின் வீட்டிற்கு அவருடைய வார்த்தையை நம்பி போனால் 20 வயதுப் பெண்ணிற்கு ஏற்பட்ட விபரீதம் சட்டீஸ்கர் மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

சத்தீஸ்கர் மாநிலத்தில் உள்ள ராய்பூர் என்ற பகுதியை சேர்ந்த 20 வயது பெண்ணும் ஒரு வாலிபரும் கடந்த சில மாதங்களாக காதலித்து வந்தனர். இந்த நிலையில் தங்களது காதலின் அடுத்தகட்டம் குறித்து பேச வேண்டும், எனவே வீட்டிற்கு வா’ என காதலன் தொலைபேசியில் அழைத்து உள்ளார்

அவரை நம்பி அந்த பெண் அவருடைய வீட்டிற்குச் சென்றபோது காதலன் அந்த வீட்டில் இல்லை என தெரிகிறது. அந்த பெண்ணை வீட்டிற்குள் அழைத்து சென்ற காதலனின் பெற்றோர்கள் அவரிடம் இந்த காதலை விட்டு விடுமாறு கூறியதாக தெரிகிறது. ஆனால் அந்தப் பெண் தனது காதலில் உறுதியாக இருக்க, இதனால் ஆத்திரமடைந்த காதலனின் பெற்றோர் மற்றும் காதலனின் சகோதரன் மனைவி ஆகியோர் திடீரென அங்கிருந்த மண்ணெண்ணையை எடுத்து அந்த பெண் மீது ஊற்றி உயிரோடு கொளுத்தினர். இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த பெண் தீக்காயங்களுடன் அலறினார்

இதுகுறித்து தகவல் அறிந்த அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் காவல்துறைக்கு தகவல் அளித்தனர். காவல்துறையினர் விரைந்து வந்து தீக்காயங்களால் படுகாயமடைந்த பெண்ணை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் காதலனின் பெற்றோரையும் சகோதரர் மனைவியையும் கைது செய்து அவர்கள் மீது கொலை முயற்சி வழக்கு பதிவு செய்தனர்

காதலியை நைசாக பேசி வீட்டிற்கு அழைத்து உயிரோடு தீவைத்து கொலை செய்ய முயன்ற காதலன் தற்போது தலைமறைவாக இருப்பதாகவும் அவரை தேடும் பணியில் போலீசார் தீவிரமாக இருப்பதாகவும் கூறப்படுகிறது

More News

சூர்யாவுடன் முதல்முறையாக இணையும் பிரபலம்

நடிகர் சூர்யா நடித்து முடித்துள்ள 38வது திரைப்படமான 'சூரரைப்போற்'று என்ற திரைப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிந்து தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று

திருமணமான சில நாட்களில் 100 பவுன் நகைகளுடன் காதலனுடன் மாயமான மணப்பெண்!

கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் திருமணமான ஒரு சில நாட்களில் காதலனுடன் 100 பவுன் தங்க நகையுடன் மாயமான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

உலக நாயகன் என்று சொல்லி கொண்டால் மட்டும் போதுமா? ஹெச்.ராஜா

குடியுரிமை சட்டம் குறித்து சமீபத்தில் கருத்து கூறிய நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன், 'வாக்கு வங்கிக்காக குடியுரிமை சீர்திருத்த சட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது

டி.ராஜேந்தருக்கு கிடைத்த அசத்தலான வெற்றி!

சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய 3 மாவட்ட திரைப்பட விநியோகஸ்தர்கள் சங்க தேர்தல் நேற்று நடைபெற்றது. 

உதயநிதியின் 'வசதியான வயதானவர்' டுவீட்டுக்கு ராதாரவியின் பதில்!

திமுக இளைஞரணி  செயலாளரும் நடிகருமான உதயநிதி சமீபத்தில் தனது டுவிட்டர் பக்கத்தில் 'தலைவர் ஸ்டாலின் அவர்கள் தலைமையில் 23ம்தேதி சென்னையில் நடைபெறும் குடியுரிமை