அடுத்த ஆண்டு இந்தியாவில் இருந்து ஆஸ்காருக்கு செல்லும் திரைப்படம்.. அதிகாரபூர்வ அறிவிப்பு..!

  • IndiaGlitz, [Wednesday,September 27 2023]

அடுத்த ஆண்டு இந்தியாவிலிருந்து ஆஸ்கார் விருதுக்கு செல்லும் திரைப்படத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது.

திரை உலகினர்களுக்கு ஆஸ்கர் விருது பெற வேண்டும் என்பது மிகப்பெரிய கனவாக இருக்கும் நிலையில் பல்வேறு நாடுகளில் இருந்து இந்த விருதுக்கு திரைப்படங்கள் தேர்வு செய்து அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது.

அந்த வகையில் 2024 ஆம் ஆண்டு நடைபெற உள்ள ஆஸ்கர் விருதுக்கு இந்தியா சார்பில் மலையாளத்தில் சூப்பர் ஹிட் வெற்றி பெற்ற ’2018’ படம் தேர்வாகியுள்ளது. இந்த தகவலை இந்திய திரைப்பட கூட்டமைப்பு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

கடந்த 2018 ஆம் ஆண்டு கேரளாவில் பெய்த கனமழை மற்றும் பெரு வெள்ளத்தை அடிப்படையாகக் கொண்டு இந்த படம் உருவாக்கப்பட்டு இருந்தது. ஜூட் ஆண்டனி ஜோசப் இயக்கியிருந்த இந்த படத்தில் டொவினோ தாமஸ், குஞ்சாக்கோ போபன், ஆசிப் அலி, வினித் சீனிவாசன், லால், நரேன் உள்பட பலர் நடித்திருந்தனர்

சூப்பர் ஹிட் ஆன இந்த படம் வெறும் 30 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவாக்கப்பட்டு 200 கோடி வசூல் செய்தது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் வசூலில் சாதனை செய்த ’2018’ திரைப்படம் ஆஸ்கர் விருதை பெறுமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

More News

கவின் அடுத்த படத்தை இயக்கப்போவது இந்த பிரபல இயக்குனரா? வேற லெவல் தகவல்..!

'டாடா' என்ற ஒரே ஒரு படம் பெற்ற வெற்றி காரணமாக நடிகர் கவினுக்கு தற்போது திரையுலகில் வாய்ப்புகள் குவிந்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம். தற்போது அவர் இளன் இயக்கத்தில் உருவாகி

பிக்பாஸ் ஸ்ருதி பெரியசாமி  நடிக்கும் 'வாழ்வு தொடங்குமிடம் நீதானே': பத்திரிக்கையாளர் சந்திப்பு

நடிகைகள் ஸ்ருதி பெரியசாமி மற்றும் நிரஞ்சனா நெய்தியார் கதையின் நாயகிகளாக முதன்மையான கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் 'வாழ்வு தொடங்குமிடம் நீதானே' எனும் திரைப்படம்,

சமந்தாவின் 'குஷி' உள்பட 4 திரைப்படங்கள்.. ஓடிடி ரசிகர்களுக்கும் குஷி தான்..!

இந்த வாரம் ராகவா லாரன்ஸ் நடித்த 'சந்திரமுகி 2',  ஜெயம் ரவி, நயன்தாரா நடித்த 'இறைவன்' சித்தார்த் நடித்த 'சித்தா' போன்ற திரைப்படங்கள் திரையரங்குகளில் வெளியாக இருக்கும் நிலையில் விஜய்

தயார்  நிலையில் 'அயலான்' டீசர்.. ரிலீசுக்கு பின் எதிர்பார்ப்பு எகிறுமா?

சிவகார்த்திகேயன் நடித்த 'அயலான்' திரைப்படம் வரும் தீபாவளிக்கு வெளியாகும் என்று முதலில் கூறப்பட்ட நிலையில் அதன் பின்னர் பொங்கல் தினத்தில் வெளியாகும் என மாற்றி அறிவிக்கப்பட்டது

என்ன ஒரு அழகு... உயிர்-உலகு  பிறந்த நாளை கொண்டாடும் விக்கி-நயன் வைரல் புகைப்படங்கள்..!

லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாரா மற்றும் அவரது கணவர் விக்னேஷ் சிவன் ஆகிய இருவரும் தங்கள் இரட்டை குழந்தைகளின் பிறந்தநாளை கொண்டாடும் புகைப்படங்களை சமூக வலைதளங்களில்