அடுத்தடுத்து வெளியாகும் பிரபலங்களின் திரைப்படங்கள்: ஒரு பார்வை 

  • IndiaGlitz, [Wednesday,July 04 2018]

இந்த ஆண்டின் முதல் பாதியில் கிட்டத்தட்ட ஒரு மாதத்திற்கு மேல் கோலிவுட் வேலைநிறுத்தம் காரணமாக பல புதிய திரைப்படங்கள்  வெளியாகவில்லை. அந்த படங்கள் எல்லாம் தற்போது ஒவ்வொன்றாக வெளியாகி வருகிறது. இந்த நிலையில் இந்த ஆண்டின் இரண்டாம் பாதியில் பல முன்னணி நடிகர்களின் படங்கள் ரிலீசுக்கு காத்திருப்பதால் சினிமா ரசிகர்களுக்கு கொண்டாட்டமாக இருக்கும்

இந்த வார வெள்ளியன்று கார்த்திக், கெளதம் கார்த்திக் நடித்த 'Mr.சந்திரமெளலி திரைப்படம் வெளியாகவுள்ளது. இதனையடுத்து ஜூன் 13ஆம் தேதி கார்த்தியின் 'கடைகுட்டி சிங்கம்' மற்றும் சிவாவின் 'தமிழ்ப்படம் 2' ரிலீஸ் ஆகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன்பின்னர் நயன்தாராவின் 'கோலமாவு கோகிலா' மற்றும் 'இமைக்கா  நொடிகள், 'விஜய்சேதுபதியின் 'ஜூங்கா', ஆர்யாவின் 'கஜினிகாந்த்', சந்தானம் நடித்த 'சர்வர் சுந்தரம், 'ஜீவாவின் 'கொரில்லா ஆகிய படங்கள் ஜூன் மற்றும் ஜூலையில் ரிலீசுக்கு தயாராக உள்ளன.

இதனையடுத்து ஆகஸ்ட் மாதம் 10ஆம் தேதி கமல்ஹாசனின் 'விஸ்வரூபம் 2' திரைப்படமும் இதே மாதத்தில் விக்ரம் நடித்த 'சாமி 2' படமும் ரிலீஸ் ஆகவுள்ளது. மேலும் வரும் செப்டம்பர் மாதம் விநாயகர் சதூர்த்தி தினத்தில் சிவகார்த்திகேயனின் 'சீமராஜா மற்றும் தனுஷின் 'வடசென்னை ஆகிய படங்கள் ரிலீஸ் ஆகவாய்ப்பு உள்ளது. இதனையடுத்து தீபாவளி திருநாளில் விஜய்யின் 'சர்கார்' மற்றும் சூர்யாவின் 'என்.ஜி.கே' ஆகிய இரண்டு மாஸ் நடிகர்கள் படங்கள் வெளியாகவுள்ளது.

இவை போக இன்னும் ஏகப்பட்ட சின்ன பட்ஜெட் படங்கள் ரிலீசுக்கு தயாராக இருந்தும் சரியான வெளியீட்டு தேதிக்காக காத்திருக்கின்றன. இவற்றில் எத்தனை படங்கள் வெற்றிப்படங்கள் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்
 

More News

விரல்களை காட்டி செல்பி எடுத்தால் என்ன ஆகும்? ரூபா ஐபிஎஸ் எச்சரிக்கை

சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று பெங்களூரு சிறையில் இருக்கும் சசிகலாவுக்கு சிறை அதிகாரிகள் பல்வேறு வசதிகள் செய்து கொடுத்ததாக குற்றஞ்சாட்டி பெரும் பரபரப்புக்கு ஆளானவர் ஐபிஎஸ் அதிகாரி ரூபா.

கமல்-விஜய் இணையும் படம் எனது ட்ரீம் புரஜொக்ட்: சொன்னது யார் தெரியுமா?

உலக நாயகன் கமல்ஹாசனும், தளபதி விஜய்யும் ஒருசில விழா மேடைகளில் ஒன்றாக இணைந்துள்ளனர் என்பதும் ஒருவர் மீது ஒருவர் மிகுந்த மரியாதை கலந்த அன்பு வைத்துள்ளனர்

வித்யாபாலனின் முதல் தென்னிந்திய திரைப்படம்

தேசிய விருது பெற்ற பிரபல பாலிவுட் நடிகை வித்யாபாலன், பாலிவுட்டின் முன்னணி நாயகிகளில் ஒருவர். திருமணத்திற்கு பின்னரும் பிசியாக நடித்து கொண்டிருக்கும் நடிகைகளில் ஒருவர் வித்யாபாலன்.

தல ரசிகர்களுக்கு ஒரு இன்ப அதிர்ச்சி செய்தி

'தல' என்று கிரிக்கெட் ரசிகர்களால் அன்புடன் அழைக்கப்பட்டு வரும் முன்னாள் இந்திய கேப்டன் தோனியின் வாழ்க்கை வரலாறு திரைப்படம் 'தோனி தி அண்டோல்ட் ஸ்டோரி'

சூர்யா படத்தில் ஆர்யா! உறுதி செய்த ஆனந்த்

பிரபல இயக்குனர் கே.வி.ஆனந்த் இயக்கத்தில் சூர்யா நடித்து வரும் 'சூர்யா 37' படத்தின் படப்பிடிப்பு லண்டனில் நடந்து வருகிறது. இந்த படத்தில் ஏற்கனவே மோகன்லால்,