close
Choose your channels

அடுத்தடுத்து வெளியாகும் பிரபலங்களின் திரைப்படங்கள்: ஒரு பார்வை 

Wednesday, July 4, 2018 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

இந்த ஆண்டின் முதல் பாதியில் கிட்டத்தட்ட ஒரு மாதத்திற்கு மேல் கோலிவுட் வேலைநிறுத்தம் காரணமாக பல புதிய திரைப்படங்கள்  வெளியாகவில்லை. அந்த படங்கள் எல்லாம் தற்போது ஒவ்வொன்றாக வெளியாகி வருகிறது. இந்த நிலையில் இந்த ஆண்டின் இரண்டாம் பாதியில் பல முன்னணி நடிகர்களின் படங்கள் ரிலீசுக்கு காத்திருப்பதால் சினிமா ரசிகர்களுக்கு கொண்டாட்டமாக இருக்கும்

இந்த வார வெள்ளியன்று கார்த்திக், கெளதம் கார்த்திக் நடித்த 'Mr.சந்திரமெளலி திரைப்படம் வெளியாகவுள்ளது. இதனையடுத்து ஜூன் 13ஆம் தேதி கார்த்தியின் 'கடைகுட்டி சிங்கம்' மற்றும் சிவாவின் 'தமிழ்ப்படம் 2' ரிலீஸ் ஆகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன்பின்னர் நயன்தாராவின் 'கோலமாவு கோகிலா' மற்றும் 'இமைக்கா  நொடிகள், 'விஜய்சேதுபதியின் 'ஜூங்கா', ஆர்யாவின் 'கஜினிகாந்த்', சந்தானம் நடித்த 'சர்வர் சுந்தரம், 'ஜீவாவின் 'கொரில்லா ஆகிய படங்கள் ஜூன் மற்றும் ஜூலையில் ரிலீசுக்கு தயாராக உள்ளன.

இதனையடுத்து ஆகஸ்ட் மாதம் 10ஆம் தேதி கமல்ஹாசனின் 'விஸ்வரூபம் 2' திரைப்படமும் இதே மாதத்தில் விக்ரம் நடித்த 'சாமி 2' படமும் ரிலீஸ் ஆகவுள்ளது. மேலும் வரும் செப்டம்பர் மாதம் விநாயகர் சதூர்த்தி தினத்தில் சிவகார்த்திகேயனின் 'சீமராஜா மற்றும் தனுஷின் 'வடசென்னை ஆகிய படங்கள் ரிலீஸ் ஆகவாய்ப்பு உள்ளது. இதனையடுத்து தீபாவளி திருநாளில் விஜய்யின் 'சர்கார்' மற்றும் சூர்யாவின் 'என்.ஜி.கே' ஆகிய இரண்டு மாஸ் நடிகர்கள் படங்கள் வெளியாகவுள்ளது.

இவை போக இன்னும் ஏகப்பட்ட சின்ன பட்ஜெட் படங்கள் ரிலீசுக்கு தயாராக இருந்தும் சரியான வெளியீட்டு தேதிக்காக காத்திருக்கின்றன. இவற்றில் எத்தனை படங்கள் வெற்றிப்படங்கள் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்
 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.