4 பெண்கள் உட்பட 11 தனிநபர்களுக்கு… 2020 நோபல் விருதுகள் …

  • IndiaGlitz, [Monday,October 12 2020]

 

2020 ஆம் ஆண்டிற்கான நோபல் விருதுகள் கடந்த அக்டோபர் 5 ஆம் தேதி முதல் அறிவிக்கப்பட்டு வருகிறது. மருத்துவம், இயற்பியல், வேதியியல், இலக்கியம், அமைதி, பொருளாதாரம் எனும் 6 துறைகளுக்கான விருதுகள் ஆண்டுதோறும் அத்துறை சார்ந்த சாதனையாளர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் இந்த ஆண்டிற்கான விருது பட்டியலின் இறுதி வெளியாகி இருக்கிறது.

2020 நோபல் விருதுக்கான போட்டிக்காக உலகம் முழுவதும் 211 தனிநபர்கள் மட்டும் 107 அமைப்புகள் என 318 பேர் கலந்து கொண்டுள்ளனர். அதில் கடந்த 5 ஆம் தேதி மருத்துவத் துறைக்கான நோபல் விருது அறிவிக்கப்பட்டது. அமெரிக்காவைச் சேர்ந்த ஹார்வி ஜே.ஆல்டர், சார்லஸ் எம் ரைஸ் மற்றும் பிரிட்டனைச் சேர்ந்த விஞ்ஞானி மைக்கேல் ஹாட்டர் ஆகிய 3 பேருக்கும் இந்த விருது பகிர்ந்து கொடுக்கப்பட இருக்கிறது.

தொடர்ந்து கடந்த 6 ஆம் தேதி இயற்பியல் துறைக்கான நோபல் பரிசு பட்டியல் வெளியிடப்பட்டது. அதில் ஒரு பெண் விஞ்ஞானி இடம் பிடித்து இரந்தார். ரோஜர் பென்ரோஸ், ரெயின் ஹார்ட் ஜென்சில் மற்றும் ஆண்டிரியா கெஸ் ஆகிய 3 பேருக்கும் இந்த விருது அறிவிக்கப்பட்டது.

அடுத்து கடந்த 7 ஆம் தேதி வேதியியல் துறைக்கான நோபல் விருது பட்டியல் வெளியானது. அது பிரான்ஸ் நாட்டைச் சார்ந்த இமானுவேல் சார்பென்டியர், அமெரிக்காவைச் சேர்ந்த ஜெனிஃபர் டவுட்னா என்ற இரு விஞ்ஞானிகளுக்கும் இந்த விருது வழங்கப்பட இருப்பதாக அறிவிப்பு வெளியானது.

தொடர்ந்து கடந்த 8 ஆம் தேதி இலக்கியத்திற்கான நோபல் பரிசு விருதை ஒரு பெண் கவிஞர் சோலாவாகத் தட்டிச் சென்றார். அமெரிக்காவைச் சேர்ந்த கவிஞர் லூயிஸ் க்ளக் (77) க்கு இந்த விருது அறிவிக்கப்பட்டு இருக்கிறது. இவர் 12 கவிதைத் தொகுப்புகள் மற்றும் பல நூறு கட்டுரைகளை எழுதிக் குவித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

நோபல் விருதுகளில் அமைதிக்கான நோபல் விருதுக்கு எப்போதும் தனிச்சிறப்பு இருக்கத்தான் செய்கிறது. காரணம் மற்ற விருதுகள் அவர்களுடைய அறிவுக்காகவும் சமூகத்தின் மீது கொண்டிருக்கும் அக்கறைக்காகவும் வழங்கப்படும். ஆனால் அமைதிக்கான விருது முழுக்க முழுக்க சமூகத்தின் முன்னேற்றத்திற்காக அரும்பாடுபட்ட ஒரு சாதனையாளர்களுக்கோ அல்லது அமைப்புக்கோ அளிக்கப்படும். இந்த ஆண்டுக்கான அமைதிக்கான நோபல் விருதை ஐ.நா. அவையின் உணவு நிறுவனமான உலக உணவுத் திட்டத்தற்கு (WFP) வழங்கப்பட இருக்கிறது. இந்த அறிவிப்பு கடந்த 9 ஆம் தேதி வெளியானது.

அதைத்தொடர்ந்து இன்று பொருளாதாரத்திற்கான நோபல் விருது அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. பொருளாதார வல்லுநர்கள் பால் ஆர் மில்க்ரோம் மற்றும் ராபர்ட் வில்சன் ஆகிய இருவருக்கும் இந்த விருது பகிர்ந்து அளிக்கப்பட இருக்கிறது. ஏல கோட்பாட்டின் மேம்பாடு மற்றும் புதிய ஏல முறைகளை உருவாக்கியதற்காக இருவருக்கும் நோபல் விருது பகிர்ந்து அளிக்கப்பட்டு உள்ளது.

இந்நிலையில் 2020 நோபல் விருதுகள் 11 தனிநபர்கள் மற்றும் 1 அமைப்புக்கு கிடைத்து இருக்கிறது. அதில் 4 பெண்கள் இடம்பெற்று உள்ளனர் என்பதும் சிறப்புக்குரிய விஷயமாகப் பார்க்கப்படுகிறது.

More News

இணையத்தில் வைரலாகும் அறந்தாங்கி நிஷாவின் திருமண வீடியோ!

பிக்பாஸ் நிகழ்ச்சியின் போட்டியாளர்களில் ஒருவரான அறந்தாங்கி நிஷா பிக்பாஸ் வீட்டையே கலகலப்பாக மாற்றி வருகிறார் என்பதும் அவரது டைமிங் ஜோக் சக

யாஷிகாவை மாட்டிவிட்டவரா பாலாஜி முருகதாஸ்? தோண்ட தோண்ட கிளம்பும் மர்மம்!

பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளர்களில் ஒருவரான பாலாஜி முருகதாஸ் கடந்து வந்த பாதை என்ற தன்னுடைய வாழ்க்கை வரலாற்று கதையை கூறியபோது போட்டியாளர்கள்

'மெர்சல்' குழந்தை நட்சத்திரத்திற்கு 'பேட்ட' நடிகர் பாராட்டு!

தளபதி விஜய் நடிப்பில் அட்லி இயக்கத்தில் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் உருவான திரைப்படம் 'மெர்சல்' என்பதும் இந்த திரைப்படம் மிகப் பெரிய வெற்றி பெற்றது என்பதும் தெரிந்ததே

குஷ்புவை கலாய்த்த கஸ்தூரி: வைரலாகும் மீம்ஸ்கள்

நடிகை குஷ்பு இன்று மதியம் பாஜகவில் அதிகாரப்பூர்வமாக தன்னை இணைத்துக் கொண்டார் என்பது தெரிந்ததே. குஷ்புவின் பாஜக இணைப்பு குறித்து பல்வேறு

கமகமக்கும் பிரியாணியின் பூர்வீகம்… இந்திய மசாலாக்களோடு கலந்த சுவாரசியக் கதை!!!

இன்றளவில் பிரியாணிக்கு மயங்காதவர்கள் யாருமே இருக்க முடியாது. அசைவ பிரியர்கள் மட்டுமல்ல, சைவர்களும் பிரியாணி மசலாக்களில் சொக்கிப் போவது இயல்பான ஒன்று.