கஜா புயல் எதிரொலி: 24 மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

  • IndiaGlitz, [Friday,November 16 2018]

வங்கக்கடலில் ஏற்பட்ட கஜா புயல் இன்று அதிகாலை கரையை கடந்தபோது பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்ததால் தமிழகத்தின் பல மாவட்டங்களில் அதிக சேதம் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. கஜா புயலின் கண்பகுதி இன்று அதிகாலை கரையை கடந்தபோதிலும் முழுமையாக புயல் கரையை கடக்கவில்லை என்பதால் தொடர்ந்து அந்த பகுதியில் மழை பெய்து வருகிறதுல்.

இதனை முன்னிட்டு இன்றும் தமிழகத்தின் பல மாவட்டங்களில்  பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதுவரை வந்த தகவலின்படி தமிழகத்தில் உள்ள 24 மாவட்டங்களில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இந்த 24 மாவட்டங்களில் நாகை, கடலூர், திருச்சி, ராமநாதபுரம், திருவாரூர், புதுக்கோட்டை, திருவண்ணாமலை, விழுப்புரம், பெரம்பலூர், மதுரை, தஞ்சை, சேலம், சிவகங்கை, அரியலூர், திருப்பூர், திண்டுக்கல், கரூர் , தேனி ஆகிய மாவட்டங்கள் அடங்கும். அதேபோல் புதுச்சேரி, காரைக்கால், ஆகிய இடங்களில் உள்ள  பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

மேலும் ஈரோடு, கோவை, சேலம்,  விருதுநகர், தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

More News

ஏ.ஆர்.ரஹ்மான் பாராட்டை பெற்ற பேபிக்கு அடித்த அதிர்ஷ்டம்

ஆந்திர் மாநிலத்தை சேர்ந்த பேபி என்ற பெண், ரஹ்மான் இசையில் கடந்த 1994ஆம் ஆண்டு வெளிவந்த 'காதலன்' படத்தில் இடம்பெற்ற 'என்னவளே' என்ற பாடலின் தெலுங்கு பதிப்பை பாடிய வீடியோ நேற்று வைரலானது.

கஜா புயல்: ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் உள்பட 8 பேர் பலி

இன்று அதிகாலை நாகை அருகே கஜா புயல் கரையை கடந்த நிலையில் இந்த புயலால் பலத்த சேதங்கள் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக நாகை, திருவாரூர், தஞ்சை மாவட்டங்களில் அதிக சேதம் அடைந்திருப்பதாகவும்

வர்தா புயலுக்கு நிகரான வேகம்: கஜா புயல் குறித்து தமிழ்நாடு வெதர்மேன்

வங்கக்கடலில் உருவான கஜா புயல சில மணி நேரங்களுக்கு முன் தமிழக கரையை கடந்துள்ள நிலையில் இந்த புயல் வர்தா புயலுக்கு நிகரான வேகத்தை கொண்டிருந்ததாக தமிழ்நாடு வெதர்மேன் தெரிவித்துள்ளார்.

சிம்டாங்காரன் ஸ்டைலில் ஹர்பஜன்சிங் பதிவு செய்த டுவீட்

விஜய் நடித்த 'சர்கார்' படத்தில் இடம்பெற்ற 'சிம்டாங்காரன்' பாடல் முதலில் சிங்கிளாக வெளியானபோது அந்த பாடல் கடுமையான விமர்சனத்தை பெற்றது.

கஜா புயல் எதிரொலி: சென்னை மெரினாவில் பொதுமக்கள் வெளியேற்றம்

வங்கக்கடலில் உருவான 'கஜா' புயல் இன்று இரவு 8 மணிக்கு மேல் பாம்பன் மற்றும் கடலூர் இடையே கரையை கடக்கும் என்றும், புயல் கரையை கடக்கும்