ஒரே பிரசவத்தில் ஏழு குழந்தைகள்: 25 வயது பெண்ணுக்கு சுகப்பிரசவம்

  • IndiaGlitz, [Monday,February 18 2019]

ஈராக் நாட்டில் 25 வயது இளம்பெண்ணுக்கு ஒரே பிரசவத்தில் 7 குழந்தைகள் பிறந்துள்ளது. இதில் ஆறு பெண் குழந்தைகள் மற்றும் ஒரு ஆண் குழந்தை என்பது குறிப்பிடத்தக்கது.

ஏழு குழந்தைகளும் சுகப்பிரசவத்தில் பிறந்ததாகவும், தாயும் குழந்தைகளும் நலமுடன் இருப்பதாகவும் ஈராக் பத்திரிகைகள் செய்தி வெளியிட்டுள்ளன. பிரசவமான இளம்பெண்ணுக்கு ஏற்கனவே 3 குழந்தைகள் இருப்பதால் இவருக்கு தற்போது மொத்தம் பத்து குழந்தைகள் உள்ளது.

ஏழு குழந்தைகள் ஒரே பிரசவத்தில் பிறந்தது குறித்து கருத்து தெரிவித்த 25 வயது இளம்பெண் செய்தியாளர்களிடம் கூறியபோது, 'இனிமேல் குழந்தை பெற்று கொள்ளும் எண்ணம் இல்லை என்றும், அனைத்து குழந்தைகளையும் நல்ல
முறையில் வளர்ப்பதே எங்களது கடமை என்றும் தெரிவித்தார்.

கடந்த 1997ஆம் ஆண்டு அமெரிக்காவை சேர்ந்த ஒரு பெண்ணுக்கு உலகில் முதல்முறையாக ஏழு குழந்தைகள் பிறந்தன. அதற்கு பின்னர் தற்போதுதான் ஒரே பிரசவத்தில் ஏழு குழந்தைகளை ஒரு பெண் பெற்றெடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

More News

'மங்காத்தா 2' இயக்க பயமாக இருக்கின்றது! வெங்கட்பிரபு

தல அஜித்தின் 50வது படமான 'மங்காத்தா' திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்று சாதனை வசூல் செய்தது. தற்போது கோலிவுட் திரையுலகில் இரண்டாம் பாக சீசன் தொடர்ந்து வருவதால் 'மங்காத்தா 2' படத்தை

சிறுவனின் செயலை காப்பியடிக்கலாமா? ஸ்டாலினை நேரடியாக விமர்சனம் செய்த கமல்

மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் நேற்று கல்லூரி நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டபோது, 'ரஜினியை மறைமுகமாக தாக்கிய அவர் திமுக தலைவர் ஸ்டாலினை நேரடியாக விமர்சனம் செய்துள்ளார்.

கோதாவில் இறங்கிவிட்டு பின்வாங்கலாமா? ரஜினிக்கு கமல் மறைமுக தாக்குதல்!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நேற்று வெளியிட்ட ஒரு அறிக்கையில் வரும் பாராளுமன்ற தேர்தலில் தான் போட்டியிடவில்லை என்றும், தனது ரஜினி மக்கள் மன்ற உறுப்பினர்கள் தண்ணீர் பிரச்சனையை தீர்க்கும் கட்சிக்கு

பாகிஸ்தானுக்கு பகிரங்க ஆதரவு கொடுக்கின்றதா சவுதி அரேபியா?

பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாத அமைப்பு சமீபத்தில் காஷ்மீர் புலவாமா பகுதியில் நடத்திய கொடூர தாக்குதலுக்கு இந்திய தலைவர்கள் மட்டுமின்றி உலக தலைவர்களும் கண்டனம் தெரிவித்து வருகின்றன.

காஷ்மீர் தாக்குதல் விவகாரம்: நெட்டிசன்களுக்கு பதிலடி கொடுத்த சானியா மிர்சா

சமீபத்தில் காஷ்மீர் மாநில புல்வாமா பகுதியில் பயங்கரவாதிகளின் தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்து இந்தியாவின் சாதாரண குடிமகன் முதல் பிரபலமானவர்கள் வரை