சாய்பாபா பக்தையாக மாறிய 'கபாலி' நடிகை?

  • IndiaGlitz, [Saturday,August 22 2015]

பேராண்மை, மாஞ்சாவேலு, அரவான் மற்றும் பாலாவின் பரதேசி போன்ற பல படங்களில் நடித்த நடிகை தன்ஷிகா தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினியின் மகளாக 'கபாலி' படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இந்நிலையில் தன்ஷிகா தனது பெயரை சாய்தன்ஷிகா என மாற்றிக்கொண்டதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.


'அரவான்' படத்தில் நடித்தபோது தன்ஷிகாவுக்கு பல்வேறு பிரச்சனைகள் இருந்ததாகவும், அவருடைய தோழி ஒருவரின் அறிவுரைப்படி அவர் சாய்பாபாவை தொடர்ந்து வழிபட ஆரம்பித்ததும், அவருக்கு இருந்த பிரச்சனைகள் அனைத்தும் படிப்படியாக தீர்ந்துவிட்டதாகவும், இதன் காரணமாக தான் ஒரு சாய்பாபா பக்தையாக மாறி, தன்னுடைய பெயரை சாய்தன்ஷிகா என மாற்றியுள்ளதாகவும் கூறப்படுகிறது.

தனக்கு சூப்பர்ஸ்டார் படத்தில் நடிக்க வாப்பு கிடைத்தது கூட சாய்பாபாவின் அருளால்தான் என்று அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளதாகவும் அவரது தரப்பில் இருந்து கூறப்படுகிறது. 'கபாலி' படத்திற்கு பின்னர் தன்ஷிகா கோலிவுட்டில் கவனிக்கப்படக்கூடிய ஒரு நடிகையாக மாறிவிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. 'கபாலி'யை தவிர தன்ஷிகா 'திறந்துவிடு சீசே' என்ற படத்திலும் நடித்து வருகிறார்.

More News

பாலிவுட்டிலும் சாதனை படைத்த இளையதளபதியின் 'புலி'

இளையதளபதி விஜய் நடித்த புலி' படத்தின் டிரைலர் இணையதளங்களில் ஒரு பெரிய சூறாவளியை ஏற்படுத்திவிட்ட நிலையில் இந்த படத்தின் எதிர்பார்ப்பு மிக அதிகமாகியுள்ளதாக ...

மூன்றாவது முறையாக ஹரியுடன் இணையும் விக்ரம்?

நடிகர் விக்ரம் தற்போது 10 எண்றதுக்குள்ள' படத்தின் கிளைமாக்ஸ் படப்பிடிப்பில் பிசியாக உள்ளார். இம்மாத இறுதியில் விக்ரம் இந்த படத்தை முடித்துவிட்டு அடுத்ததாக....

விஷாலின் 'பாயும் புலி' சென்சார் விபரங்கள்

ஒருபக்கம் இளையதளபதியின் 'புலி' படத்தின் டிரைலர் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வரும் நிலையில்...

ஹாலிவுட் நாயகிகளுக்கு இணையாக ஒப்பிடப்படும் 'புலி' ஸ்ரீதேவி?

இளையதளபதி விஜய் நடித்த 'புலி' படத்தின் டிரைலர் நேற்று ரிலீஸாகி இணையதளங்களையே ஸ்தம்பிக்க வைக்கும் அளவிற்கு..

பாகுபலி க்கு இணையாகுமா புலி? ஒரு ஒப்பீடு

இந்திய அளவில் மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாகி, வசூலிலும் மிகப்பெரிய சாதனை செய்த படம் சமீபத்தில் வெளிவந்த எஸ்.எஸ்.ராஜமவுலியின் 'பாகுபலி திரைப்படம். ரூ.250 கோடி பட்ஜெட்டில் உருவாகிய இந்த படம் உலகம் முழுவதும்...