3 டாக்டர்கள், 26 நர்ஸ்களுக்கு கொரோனா பாதிப்பு: மூடப்பட்டது பிரபல மருத்துவமனை

ந்தியாவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் பலியானவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. குறிப்பாக மகாராஷ்டிர மாநிலத்தில் கொரோனா பாதிப்பு மிக வேகமாக அதிகமாகிக் கொண்டு வருவதால் அம்மாநிலத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

மகாராஷ்டிர மாநிலத்தில் 781 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் 45 பேர் பலியாகி உள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது. இந்த நிலையில் மகாராஷ்டிர மாநில தலைநகர் மும்பையில் உள்ள வோக்கார்ட் என்றா சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையில் பணிபுரிந்த மூன்று டாக்டர்கள் மற்றும் 26 நர்ஸ்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது என்றும், கொரோனா பாதித்த நபர்களுக்கு அவர்கள் சிகிச்சை அளித்த போது இந்த தோற்று அவர்களுக்கு பரவி இருக்கலாம் என்று கருதப்படுகிறது

இதனை அடுத்து இந்த மருத்துவமனை மூடப்பட்டது. இந்த மருத்துவமனையில் சிகிச்சைக்கு செல்லவோ அல்லது ஏற்கனவே இந்த மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நோயாளிகள் இந்த மருத்துவமனையில் இருந்து வெளியே செல்ல அனுமதி இல்லை என மும்பை மாநகராட்சி தெரிவித்துள்ளது. பாதிக்கப்பட்ட டாக்டர்கள் மற்றும் நர்சுகள் அடுத்தடுத்து இரண்டு பரிசோதனைகள் செய்யப்பட்டு அவர்களுக்கு கொரோனா தொற்று இல்லை என்று தெரியும் வரை இந்த தடை தொடரும் என மும்பை மாநகராட்சி தெரிவித்துள்ளது

இதுகுறித்து மாநகராட்சி ஆணையர் சுரேஷ் ககானி அவர்கள் கூறியதாவது: இந்த மருத்துவமனையில் இவ்வளவு பேருக்கு எப்படி பாதிப்பு பரவியது என்பது பற்றி தலைமை சுகாதார அதிகாரியின் கீழ் அமைக்கப்பட்ட குழுவினர் விசாரணை மேற்கொள்வார்கள். இது துரதிர்ஷ்டவசம் நிறைந்தது. அவர்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டிருக்க வேண்டும் என கூறியுள்ளார்.

More News

கொரோனா விடுமுறையில் பால் கறக்க கற்று கொண்ட 'மாஸ்டர்' நடிகர்

தளபதி விஜய் நடிப்பில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள 'மாஸ்டர்' திரைப்படத்தில் முக்கிய வேடத்தில் நடித்த நடிகரும் தொலைக்காட்சி பிரபலமுமான தீனா,

கொரோனா தடுப்பு நடவடிக்கைக்கு விஜய்காந்த் செய்த மிகப்பெரிய உதவி

இந்தியா முழுவதிலும் உள்ள அனைத்து மாநிலங்களும் கொரோனாவால் திண்டாடி வரும் நிலையில் அரசின் நடவடிக்கைக்கு உதவி செய்யும் வகையில் திரையுலக பிரபலங்கள் உள்பட பலர் கோடிக்கணக்கிலும் லட்சக்கணக்கிலும்

பிரதமர் உள்பட அனைத்து எம்பிக்களுக்கும் சம்பளம் குறைப்பு: 2 ஆண்டுக்கு எம்பி நிதியும் கிடையாது

பிரதமர் மற்றும் அமைச்சர்களின் ஊதியமும் 30 சதவீதம் பிடித்தம் செய்யப்படும் என மத்திய அமைச்சரவை சற்றுமுன் முடிவு செய்துள்ளது. அதேபோல் குடியரசுத் தலைவர், துணை குடியரசுத் தலைவர்,

இனி, கொரோனா நோயாளிகளைப் பயப்படாமல் அழைத்துச் செல்லலாம்!!! மருத்துவர்கள் உருவாக்கிய புதிய வாகனம்!!!

கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களை நெருங்கும்போது மிகவும் பாதுகாப்பான வழிமுறைகளை கையாள வேண்டியிருக்கிறது.

கொரோனாவை துப்பாக்கியால் சுட்டு வீழ்த்திய பாஜக பிரமுகர்!!!

இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து கொண்டே வருகிறது. இதனால் ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்படுமா என்ற சந்தேகம் மக்கள் மத்தியில் எழுந்துள்ளது.