விமானத்தின் டயரைப் பிடித்துத் தொங்கிய 3 பேர்… அலற வைக்கும் ஆப்கன் வீடியோ!

  • IndiaGlitz, [Monday,August 16 2021]

ஆப்கானிஸ்தான் நாட்டிலுள்ள சர்வதேச விமான நிலையத்தை தாலிபான்கள் தற்போது மூடியுள்ளனர். ஏற்கனவே தாலிபான்கள் மீதுள்ள பீதி காரணமாக சொந்த நாட்டு மக்களும் தற்போது நாட்டைவிட்டு செல்வதற்கு முயற்சி செய்து வருகின்றனர். இதனால் தலைநகர் காபூலில் உள்ள சர்வதேச விமான நிலையத்தில் கூட்டம் அலைமோதுகிறது.

இந்நிலையில் காபூலில் இருந்து கிளம்பிய பெரிய விமானத்தின் டயரைப் பிடித்து 3 பேர் தொங்கிக் கொண்டே பயணித்த நிலையில் அவர்கள் சில நிமிடங்களில் கீழே விழுந்து உயிரிழந்த வீடியோ தற்போது சோஷியல் மீடியாவில் வெளியாகி கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

காபூல் விமான நிலையத்தில் இன்று காலை முதலே கூட்டம் அலைமோதுகிறது. இதனால் கூட்டத்தைக் கட்டுப்படுத்த தாலிபான்கள் பொதுமக்களின் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதாகவும் இதில் 5 பேர் உயரிழந்ததாகவும் தகவல் வெளியாகியது. இதையடுத்து மீண்டும் பொதுமக்கள் இராணுவ விமானங்களை மறித்துக் கொண்டு தப்பித்துச் செல்லும் புகைப்படங்கள் வெளியாகி பார்ப்போரை கண்ணீர் சிந்த வைக்கிறது.

தாலிபான்களின் கட்டுப்பாட்டில் இருக்க விரும்பாமல் மக்கள் சொந்த ஊர், உடைமைகளை விட்டுவிட்டு தப்பித்துச் செல்ல முயற்சித்து வருகின்றனர். இந்நிலையில் சர்வதேச விமான நிலையமும் மூடப்பட்டு இருக்கிறது. இதனால் அங்கிருக்கும் வெளிநாட்டினரும் சொந்த ஊருக்குத் திரும்ப முடியாத நிலைமை ஏற்பட்டு இருக்கிறது. இந்நிலையில் பயணிகள் சிலர் விமானத்தின் டயரைப் பிடித்து தொங்கி உயிரிழந்த சம்பவம் சர்வதேச அளவில் கடும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

More News

கார் வாங்குனதுக்கு அப்புறம் சின்னராச கையில புடிக்க முடியலை: ஷிவானியை கலாய்த்த நெட்டிசன்ஸ்!

நடிகையும் பிக்பாஸ் போட்டியாளர்களில் ஒருவருமான ஷிவானி நாராயணன் சமீபத்தில் புத்தம் புதிய ஆடி கார் வாங்கினார் என்பதும் அந்த காருடன் கூட புகைப்படத்தை தன்னுடைய இன்ஸ்டாகிராமில் பதிவு

விஜய்சேதுபதியின் 'துக்ளக் தர்பார்' படத்தின் முக்கிய அப்டேட்!

மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடித்த படங்களில் ஒன்று 'துக்ளக் தர்பார்' என்பதும் இந்த படத்தின் படப்பிடிப்பு மற்றும் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் முடிந்து ரிலீசுக்கு தயாராக உள்ளது என்பதும் தெரிந்ததே

புல்லட்டில் நின்று ஹாட் போஸ் கொடுத்த நடிகை ரக்ஷிதா.....! புகைப்படங்கள் இணையத்தில் வைரல்.....!

சீரியல் மூலம் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவர் தான் நடிகை ரக்ஷிதா மஹாலட்சுமி. பெயருக்கேற்றாற் போல் அழகிலும்,

மகளின் முக்கியமான புகைப்படத்தை வெளியிட்டு புளங்காகிதம் அடைந்த குஷ்பு!

ரஜினி, கமல் உள்பட பல முன்னணி நடிகர்களுடன் நடித்தவர் குஷ்பு என்பதும், தற்போது நடிப்பு மட்டுமின்றி அரசியலிலும் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார் என்பதும் தெரிந்ததே.

பிகினி புகைப்படத்தை வெளியிட்டு ஜோக் சொன்ன 'அன்பிற்கினியாள்'!

'அன்பிற்கினியாள்' படத்தில் நடித்த நடிகை கீர்த்தி பாண்டியன் தனது சமூக வலைத்தளத்தில் பிகினி புகைப்படங்களை வெளியிட்டு அதில் ஜோக் ஒன்று கூறியுள்ளார். இந்த பதிவு தற்போது வைரலாகி வருகிறது