3 மாதத்தில் பெய்யவேண்டிய மழை 20 நிமிடத்தில் கொட்டித்தீர்த்தக் கொடூரம்!!!

  • IndiaGlitz, [Friday,August 14 2020]

 

பருவமழை காலத்தில் இந்தியா உட்பட பல நாடுகளில் பல லட்சக்கணக்கான மக்கள் வாழ்க்கையை இழப்பதும், சில ஆயிரக்கணக்கான உயிரிழப்புகள் ஏற்படுவதும் சகஜமாக இருந்து வருகிறது. இந்நிலையில் கடந்த செவ்வாய் கிழமை ஸ்பெயின் நாட்டின் சில மாகாணங்களில் பெய்த கனமழையால் தற்போது ஒட்டுமொத்த நாடுமே நிலைகுலைந்து போயிருப்பதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன. அதிலும் செவில் என்ற மாகாணத்தில் 3 மாதங்கள் பெய்யவேண்டிய மழை வெறுமனே 20 நிமிடத்தில் கொட்டித்தீர்த்த கொடூரம் நடந்திருப்பதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டு இருக்கின்றன.

செவில் மாகாணத்தில் உள்ள ஏமொட் வானிலை நிறுவனம் கடந்த செவ்வாய் கிழமை அன்று செவில் உள்ளிட்ட சில பகுதிகளுக்கு மஞ்சள் நிற எச்சரிக்கையை விடுத்து இருந்ததாகக் கூறப்படுகிறது. அந்த எச்சரிக்கை மாலை 4 மணியளவில் ஆரஞ்சு வண்ணமாக மாறியதாகவும் அதற்குப்பின் சில நொடிகளில் பெய்த கனமழையால் சாலையில் வெள்ளம் ஏற்பட்டு கரைபுரண்டு ஓடியதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன. வெள்ளத்தில் வீடுகள், கார் என சாலையில் நிறுத்தப்பட்டு இருந்த அனைத்து வாகனங்களும் அடித்துச் செல்லப்பட்ட காட்சி பார்ப்போரை பதைபதைக்க வைத்திருக்கிறது.

3 மாதங்களில் பெய்ய வேண்டிய மழை, செவில் பகுதியில் வெறுமனே 20 நிமிடங்களில் கொட்டித் தீர்த்ததாகக் கூறப்படுகிறது. எஸ்டெபா என்ற பகுதியல் இடி மற்றும் மின்னலுடன் ஆலங்கட்டி மழை பெய்ததால் பல வீடுகள் சேதம் அடைந்ததாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன. தற்போது அங்கிருந்தோரை பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பிவிட்டு மீட்பு பணிகள் தொடங்கப்பட்டு உள்ளதாகவும் கூறப்படுகிறது.

ஒவ்வொரு ஆண்டின் மழைக்காலத்திலும் இந்தியாவில் மகாராஷ்டிரா, பீகார், அசாம் போன்ற மாநிலங்களில் கனமழை பெய்து பெரும் சேதத்தை ஏற்படுத்தும் அபாயம் தொடர்ந்து கொண்டிருக்கிறது. இந்த ஆண்டின் ஜுன் மாதத்தில் இருந்து பெய்த கனமழையால் வட இந்திய மாநிலங்களில் 134 பேர் உயிரிழந்ததாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. இந்தியாவை ஒட்டியுள்ள நேபாளத்தில் தற்போது கனமழை பெய்துவருவதால் உயிரிழ்ப்புகள் அதிகரித்து இருப்பதாகக் கூறப்படுகிறது. கடந்த மே மாதம் முதற்கொண்டு நேபாளத்தில் பெய்துவரும் கனமழையால் இதுவரை 198 பேர் உயிரிழந்து விட்டதாகவும் கடுமையான சேதங்கள் ஏற்பட்டு இருப்பதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன. அதைப்போல தென் கொரியாவில் பெய்துவரும் கனமழையால் இதுவரை 30 க்கும் மேற்பட்டோர் இறந்து விட்டதாகவும் செய்திகள் கூறுகின்றன.

More News

சொகுசு காருக்குள் விபச்சாரம்: 3 ஆண்கள், 2 பெண்களை சுற்றி வளைத்த போலீஸ்

சென்னையின் முக்கிய பகுதியான வேளச்சேரியில் சொகுசு காருக்குள் விபச்சாரம் செய்த மூன்று ஆண்கள் மற்றும் இரண்டு பெண்களை சுற்றிவளைத்து போலீஸ் கைது செய்த சம்பவம்

1000 சிறை கைதிகளுக்கு கொரோனா… அதிகாரிகளையும் விட்டு வைக்கவில்லை… திடுக்கிட வைக்கும் தகவல்!!!

இந்தியாவில் அதிகம் கொரோனா பாதித்த மாநிலமாக மகாராஷ்டிரா தொடர்ந்து நெருக்கடி நிலையைச் சந்தித்து வருகிறது.

இறக்குமதி செய்யப்பட்ட கோழிக்கறியில் கொரோனாவா??? திடுக்கிடும் தவகவல்!!!

உலகிலேயே சீனாதான் அதிகளவு இறைச்சியை மற்ற நாடுகளில் இருந்து இறக்குமதி செய்கிறது.

N95 மாஸ்க்கை மின்சாரக் குக்கரில் வைத்து சுத்தப்படுத்தலாமா??? விஞ்ஞானிகளின் விளக்கம்!!!

Instant Pot, மின்சாரக் குக்கர் அல்லது ரைஸ் குக்கரின் உலர்ந்த வெப்பத்தின் மூலம் N95

உலக இடதுகையாளர்கள் தினத்தை அடுத்து தமிழ் இயக்குனரின் நெகிழ்ச்சியான பதிவு

ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 13ஆம் தேதி உலகம் முழுவதும் இடது கையாளர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது,. அன்றைய தினம் இடதுகை பழக்கம் உடையவர்கள் ஒருவருக்கொருவர் வாழ்த்துக்களை பரிமாறி கொள்வதுண்டு.