இன்று கொரோனாவால் பாதித்தவர்கள் எத்தனை பேர்? பீலா ராஜேஷ் தகவல் 

இன்று ஒரே நாளில் தமிழகத்தில் மேலும் 50 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டிருப்பதாக சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் தகவல் தெரிவித்துள்ளார். இதனையடுத்து தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 621 ஆக உயர்ந்துள்ளது. கடந்த ஆறு நாட்களாக தமிழகத்தில் சராசரியாக 50 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் தமிழகத்தில் வீட்டு கண்காணிப்பில் இருப்பவர்களின் எண்ணிக்கை 91,851 என்றும், 5016 பேர் சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர் என்றும் பீலா ராஜேஷ் தெரிவித்துள்ளார். மேலும் இன்று சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் கொரோனா பாதிப்பு ஏற்பட்டு அனுமதிக்கப்பட்டிருந்த 57 வயது பெண் ஒருவர் மரணம் அடைந்துள்ளார் என்றும் பீலா ராஜேஷ் தெரிவித்துள்ளார்.

மேலும் இன்று கொரோனாவால் பாதிக்கப்பட்ட 50 பேர்களில் 48 பேர் டெல்லி மாநாட்டில் கலந்து கொண்டு திரும்பியவர்கள் என்றும் சுகாதார துறை செயலாளர் பீலா ராஜேஷ் உறுதி செய்துள்ளார்.

More News

தூய்மை பணியாளர்களுக்கு விஜய் ரசிகர்கள் செய்த மகத்தான உதவி

நாடு முழுவதும் தற்போது கொரோனா வைரஸ் கொடூரமாக பரவி வரும் நிலையில் தங்கள் உயிரையும் பொருட்படுத்தாமல் தூய்மை பணிகளில் ஈடுபட்டுவரும் தூய்மைப் பணியாளர்களின் மதிப்பு பலருக்கு

பிரபல தயாரிப்பாளரின் மகளுக்கு கொரோனா பாசிட்டிவ்: தனிமைப்படுத்தப்பட்டதால் பரபரப்பு

பிரபல பாலிவுட் தயாரிப்பாளர் கரீம் மொரானி என்பவர் ஷாருக்கான் நடித்த 'சென்னை எக்ஸ்பிரஸ்' 'தில்வாலே' 'ஹாப்பி நியூ இயர்' 'ரா ஒன்' உள்பட பல வெற்றிப் படங்களை தயாரித்துள்ளார்.

கொரோனா தாக்கி இருக்குமா என்ற பயத்தில் தற்கொலை செய்த பெண்: பரபரப்பு தகவல்

கொரோனா வைரஸ் இந்தியா முழுவதும் மிக வேகமாக பரவி வரும் நிலையில் பஞ்சாபை சேர்ந்த 60 வயது பெண் ஒருவர் தனக்கு தொண்டை வலி இருந்ததால் கொரோனா வைரஸ்

3 டாக்டர்கள், 26 நர்ஸ்களுக்கு கொரோனா பாதிப்பு: மூடப்பட்டது பிரபல மருத்துவமனை

இந்தியாவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் பலியானவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது.

கொரோனா விடுமுறையில் பால் கறக்க கற்று கொண்ட 'மாஸ்டர்' நடிகர்

தளபதி விஜய் நடிப்பில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள 'மாஸ்டர்' திரைப்படத்தில் முக்கிய வேடத்தில் நடித்த நடிகரும் தொலைக்காட்சி பிரபலமுமான தீனா,