முதன்முறையாக 6,000ஐ கடந்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை: அதிர்ச்சி தகவல்
தமிழகத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு வருபவர்களின் எண்ணிக்கை கடந்த சில நாட்களாக 4000க்கும் அதிகமாக இருந்த நிலையில் நேற்று மட்டும் 6000ஐ நெருங்கியுள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. ஆனால் இன்று முதல்முறையாக தமிழகத்தில் 6000க்கும் அதிகமான கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது
இந்த நிலையில் சற்றுமுன் தமிழக சுகாதாரத்துறை வெளியிட்ட தகவலின்படி தமிழ்நாட்டில் இன்று 6472 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதாகவும், இதில் சென்னையில் மட்டும் இன்று 1336 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டிருப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 1,92,964 என்பதும், சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 90,900 என்பதும் குறிப்ப்பிடத்தக்கது
மேலும் இன்று தமிழ்நாட்டில் ஒரே நாளில் 88 பேர் கொரோனாவுக்கு பலியாகியுள்ளனர். இதனையடுத்து தமிழகத்தில் கொரோனாவால் பலியானவர்களின் மொத்த எண்ணிக்கை 3232 என்பதும குறிப்பிடத்தக்கது.
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5210 பேர் கொரோனாவில் இருந்து குணமாகியுள்ளனர். இதனையடுத்து கொரோனாவில் இருந்து மீண்டவர்களின் மொத்த எண்ணிக்கை 1,36,793 ஆகும். மேலும் இன்று ஒரே நாளில் 60,375 பேர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது என்பதும் தமிழகத்தில் மொத்தம் 21,57,869 பேர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது