38 வயது ஆசிரியையை திருமணம் செய்யும் 66 வயது முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர்!

  • IndiaGlitz, [Wednesday,April 27 2022]

முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் அருண்லால் 35 வயது ஆசிரியையை திருமணம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் அருண்லால் கடந்த 1982ஆம் ஆண்டு இலங்கைக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் அறிமுகமானார். பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த இவர் இந்திய அணிக்காக 16 டெஸ்ட் போட்டிகள், 13 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ளார். கடந்த 1996ஆம் ஆண்டு கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற அவர் அதன்பிறகு வர்ணனையாளராக பணிபுரிந்தார் .

இந்த நிலையில் அருண்லாலுக்கு புற்றுநோய் பாதிப்பு ஏற்பட்டதால் வர்ணனையாளர் பணியிலிருந்து விலகி பிறகு புற்றுநோயிலிருந்து மீண்டு வந்தார். தற்போது அவர் பெங்கால் கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக உள்ளார்.

இந்த நிலையில் ரீனா என்ற பெண்ணை திருமணம் செய்த அருண்லால், அவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் பிரிந்தார். தற்போது அவர் 38 வயது புல்புல் சாஹா ஆசிரியையுடன் அவர் நெருக்கமாக பழகி வந்ததாகவும் இந்த நெருக்கம் தற்போது திருமணத்தில் முடிய உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது .

அருண்லால் வரும் மே மாதம் 2ஆம் தேதி புல்புல் சாஹாவை திருமணம் செய்ய உள்ளார். இவர்களுடைய திருமண பத்திரிகையை இணையதளங்களில் வைரலாகி வருகிறது.

More News

இன்று கோடிகளில் புரளும் விஜய்யின் முதல் சம்பளம் எவ்வளவு தெரியுமா?

தமிழ் திரையுலகில் ரஜினிக்கு அடுத்ததாக மிக அதிகமாக சம்பளம் வாங்கும் நடிகர் விஜய் என்றும் அவர் கிட்டத்தட்ட 100 கோடி ரூபாய் சம்பளம் வாங்குவதாகவும் திரையுலக வட்டாரங்கள் கூறுகின்றன.

3 சம்மன்களுக்கு ஆஜராகாத இளையராஜாவுக்கு இறுதி நோட்டீஸ்: ஜிஎஸ்டி ஆணையம் அதிரடி

இசைஞானி இளையராஜாவுக்கு ஜிஎஸ்டி புலனாய்வு அலுவலகம் இறுதி நோட்டீஸ் அனுப்பியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

ஆம்புலன்ஸ் டிரைவர் கேட்ட அதிக தொகை: இறந்த மகனின் உடலை தோளில் சுமந்து பைக்கில் சென்ற தந்தை!

ஆம்புலன்ஸ் டிரைவர் கேட்ட தொகையை கொடுக்க முடியாததால் மகனின் உடலை இரு சக்கர வாகனத்தில் தோளில் சுமந்து சென்ற ஏழை தந்தை குறித்த வீடியோ இணையதளங்களில் வைரலாகி வருகிறது.

தனுஷ் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த ஹாலிவுட் படக்குழுவினர்!

தனுஷ் நடித்த ஹாலிவுட் திரைப்படமான 'தி க்ரே மேன்' என்ற படம் வரும் ஜூலை 22 ஆம் தேதி நெட்ப்ளிக்ஸ் ஓடிடியில் ரிலீசாக உள்ளது என்ற செய்தியை ஏற்கனவே பார்த்தோம்.

கடனை திருப்பி கேட்டவரை தோழியுடன் ஆபாச படம் எடுத்து மிரட்டிய சென்னை பெண் கைது!

கொடுத்த கடனை திருப்பி கேட்டவரை தோழியுடன் ஆபாச வீடியோ எடுத்து மிரட்டிய சென்னை பெண் கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது