சென்னை மெரீனா கடற்கரையில் ஜெயலலிதா இட்லி

  • IndiaGlitz, [Tuesday,December 20 2016]

மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் உடல் சென்னை மெரீனா கடற்கரையில் உள்ள எம்.ஜி.ஆர் நினைவகத்தில் அடக்கம் செய்யப்பட்டுள்ளது. இந்த இடத்திற்கு தினமும் லட்சக்கணக்கான பொதுமக்கள் கடந்த 10 தினங்களுக்கும் மேலாக அஞ்சலி செலுத்தி வருகின்றனர். ஜெயலலிதா சமாதியை பார்க்க வருபவர்களுக்கு அதிமுக சார்பில் உணவு வழங்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் சென்னை மெரீனா கடற்கரையில் ஜெயலலிதா முகத்தை போன்று வடிவமைக்கப்பட்ட இட்லி வைக்கப்பட்டுள்ளது. 68 கிலோ இட்லியால் பிரமாண்டமாக ஜெயலலிதா முகம் போன்று வடிவமைக்கப்பட்ட இந்த இட்லியை பார்வையிட சென்னை மெரீனா கடற்கரைக்கு அதிமுக தொண்டர்களும், பொதுமக்களும் இன்று காலை முதல் குவிந்து வருகின்றனர்.

வழக்கத்தைவிட இன்று அதிக கூட்டம் காணப்படுவதால் ஜெயலலிதா சமாதியில் காவல்துறையினர் தகுந்த பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.

More News

வங்கி ஊழியரை விரட்டி விரட்டி அடித்த பொதுமக்கள்.

கடந்த மாதம் 8ஆம் தேதி பிரதமரின் ரூ.500, ரூ.1000 செல்லாது என்ற அறிவிப்புக்கு பின்னர் ஏற்பட்ட பணத்தட்டுப்பாடு...

ரஜினியுடன் பணிபுரிய விரும்பிய பாலிவுட் பிரபலம்

திரையுலகில் நுழையும் ஒவ்வொரு நட்சத்திரத்திற்கும் ரஜினியுடன் ஒரு காட்சியிலாவது நடிக்க வேண்டும் என்ற கனவு இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.

ஜெயலலிதா கட்டிகாத்த அதிமுகவை நிச்சயம் காப்பாற்றுவேன். தீபா அதிரடி பேட்டி

மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா கடந்த சில நாட்களாகவே ஊடகங்களில் பரபரப்பாக பேட்டி அளித்து வரும் நிலையில் நேற்று தனியார் தொலைக்காட்சி ஒன்றில் அவருடைய பேட்டி ஒளிபரப்பானது.

உலக சாதனை செய்த கிரிக்கெட் வீரருக்கு அமைச்சரால் நேர்ந்த அவலம்

மகாராஷ்டிராவை சேர்ந்த பிரனவ் தனவேத் என்ற கிரிக்கெட் வீரர், பள்ளி அளவிலான நடந்த போட்டி ஒன்றில் 1009 ரன்கள் அடித்து உலக சாதனை செய்தவர்

செல்லாத நோட்டுக்களை வங்கியில் டெபாசிட் செய்ய புதிய நிபந்தனைகள்

ரூ.500 மற்றும் ரூ.1000 நோட்டுக்கள் செல்லாது என்று அறிவித்த மத்திய அரசு அவற்றை டிசம்பர் 30க்குள் வங்கிகளில் கொடுத்து புதிய நோட்டாக மாற்றிக்கொள்ளலாம் அல்லது வங்கிக் கணக்கில் டெபாசிட் செய்துகொள்ளலாம் என்று அறிவித்தது.