மருமகளுக்கு கொரோனா தொற்று, மாமியார் பலியான பரிதாபம்: தூத்துகுடியில் பரபரப்பு

தூத்துக்குடியில் லேப் டெக்னீசியன் பணி செய்யும் பெண் ஒருவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதை அடுத்து அவரது குடும்பத்தில் உள்ள கணவர், மாமியாருக்கும் கொரோனா தொற்று பரவி, இதில் மாமியார் சிகிச்சை பலனின்றி பலியானது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தூத்துக்குடியைச் சேர்ந்த ஒரு பெண் லேப் டெக்னீஷியனாக பணியாற்றி வந்தார். இந்த நிலையில் அவருக்கு திடீரென கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. இதனை அவர் அறியாமல் இருந்ததால் அவரது கணவருக்கும் மாமியாருக்கும் கொரோனா தொற்று பரவியது.

இதனையடுத்து மூவரும் தூத்துகுடி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வந்தனர். இந்த நிலையில் சிகிச்சை பயனின்றி லேப் டெக்னீசியன் பெண்ணின் மாமியார் உயிரிழந்தார். அவருக்கு 77 வயது என தெரிய வந்துள்ளது. இந்த சம்பவத்தால் தூத்துகுடியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

மேலும் தமிழகத்தில் கொரோனாவுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 9ஆக உயர்ந்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

More News

தமிழகத்தில் இன்று 77 பேர்களுக்கு கொரோனா தொற்று: தலைமைச்செயலாளர் தகவல்

கொரோனா வைரஸால் தமிழகத்தில் பாதிக்கப்பட்டவர்களின் தகவல்களை தினமும் சுகாதாரத்துறை அளித்து வரும் நிலையில் சற்றுமுன் இன்று கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் குறித்த தகவலை தலைமைச்செயலாளர்

ரூ.25 கோடியை அடுத்து மீண்டும் பெரிய தொகையை நிதியுதவி செய்த அக்சய்குமார்

கொரோனா வைரசுக்கு எதிரான போரில் மத்திய மாநில அரசுகள் தீவிரமாக ஈடுபட்டு வரும் நிலையில் பொதுமக்கள் மற்றும் தொழிலதிபர்கள், திரையுலக பிரபலங்கள் தாராளமாக நிதி உதவி செய்ய வேண்டும்

ஊரடங்கு நேரத்தில் புகையிலை எப்படி கிடைத்தது? பிரபல நடிகருக்கு நெட்டிசன்கள் கேள்வி

பிரபல பாலிவுட் நடிகரும் நயன்தாரா நடித்த 'இமைக்கா நொடிகள்' படத்தில் வில்லனாக நடித்தவருமான அனுராக் காஷ்யப் சமீபத்தில் தனது சமூக வலைத்தள பக்கத்தில் வெளியிட்டிருந்த வீடியோ நெட்டிசன்களால் சர்ச்சை.

250 மூட்டைகள் அரிசி வழங்கி உதவி செய்த P.T.செல்வகுமார்

கொரோனா அச்சத்தால் வீட்டில் முடக்கியிருக்கும் ஏழை மக்களுக்கு கலப்பை மக்கள் இயக்கம் தொடர்ந்து உதவி கரம் நீட்டி வருகிறது.

மே 1 வரை ஊரடங்கு உத்தரவு நீட்டிப்பு: முதலமைச்சர் அதிரடி அறிவிப்பு

தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே இருக்கும் நிலையில் ஊரடங்கு உத்தரவை