பிவி சிந்துவை காதலிக்கும் 75 வயது முதியவர்: கலெக்டரிடம் மனு!

  • IndiaGlitz, [Tuesday,September 17 2019]

இந்திய பேட்மிண்டன் வீராங்கனை பி.வி.சிந்துவை காதலிப்பதாகவும், அவரை திருமணம் செய்து வைக்கக் கோரியும் 75 வயது முதியவர் ஒருவர் ராமநாதபுரம் மாவட்ட கலெக்டரிடம் மனு அளித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்திய பேட்மிண்டன் வீராங்கனை பி.வி.சிந்து சமீபத்தில் நடைபெற்ற உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் தொடரில் தங்கம் வென்று இந்தியாவிற்கே பெருமை சேர்த்தார். அவருக்கு பிரதமர், ஜனாதிபதி உள்பட நாடே பாராட்டுக்களும் வாழ்த்துக்களையும் தெரிவித்து வருகின்றது.

இந்த நிலையில், ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகேயுள்ள விரதக்குளம் என்ற பகுதியைச் சேர்ந்த 75 வயது விவசாயியான மலைச்சாமி என்பவர், பி.வி.சிந்துவின் புகைப்படம் ஒட்டப்பட்டிருந்த மனுவை மாவட்ட கலெக்டர் வீரராகவ ராவிடம் அளித்துள்ளார். அந்த மனுவில், விளையாட்டுத்துறையில் தீராத ஆர்வம் கொண்ட தான், பேட்மிண்டன் வீராங்கனை பி.வி.சிந்துவை காதலித்து வருவதாகவும், எனவே பி.வி.சிந்துவை திருமணம் செய்தே தீருவேன் என்றும் அவரை தனக்கு திருமணம் செய்து வைக்குமாறும் தெரிவித்துள்ளார். மேலும் அவர் தனது மனுவில் தனக்கு 16 வயது மட்டுமே ஆவதாகவும், தீமைகளை அழிக்க அவதாரம் எடுத்து வந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார். இந்த மனுவால் கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
 

More News

இரண்டு நாட்கள் தள்ளிப்போகும் 'பிகில்' ரிலீஸ்: தமிழ் சினிமாவில் புதிய முயற்சி!

தளபதி விஜய் நடிப்பில் அட்லி இயக்கத்தில் ஏஆர் ரஹ்மான் இசையில் ஏஜஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகியுள்ள 'பிகில்' படத்தின் இசை வெளியீட்டு விழா நாளை மறுநாள்

நான் தான் ஃபர்ஸ்ட்: தர்ஷனை பின்னுக்கு தள்ளிய சேரன்

பிக்பாஸ் வீட்டில் இந்த வாரம் நேரடியாக இறுதிப்போட்டிக்கு தகுதி பெரும் டாஸ்க் நடைபெற்று வருகின்றன. நேற்றைய டாஸ்குகளில் தர்ஷன் அதிக புள்ளிகள் எடுத்துள்ளார்.

விக்னேஷ் சிவனின் அடுத்த படத்திலும் மாற்றுத்திறனாளியாகும் நயன்தாரா!

விக்னேஷ் சிவன் இயக்கிய 'நானும் ரவுடிதான்' திரைப்படத்தில் காது கேளாத மாற்றுத்திறனாளியாக லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா  நடித்திருந்த நிலையில் அவருடைய அடுத்த படத்திலும்

சூப்பர்குட் பிலிம்ஸ் நிறுவனத்தின் அடுத்த படம் குறித்த அறிவிப்பு!

தமிழ் திரையுலகின் முன்னணி தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான சூப்பர்குட் பிலிம்ஸ் நிறுவனம் தமிழில் முதல்முறையாக 'புதுவசந்தம்' என்ற படத்தை தயாரித்தது.

கடைசியில எது ஜெயிக்கும்... சிங்கமா? நரியா? 'மாஃபியா' டீசர் விமர்சனம்

'துருவங்கள் 16' என்ற ஹிட் படத்தை இயக்கிய இளம் இயக்குனர் கார்த்திக் நரேன் இயக்கியிருக்கும் அடுத்த படம் 'மாஃபியா'.