முடிவுக்கு வந்தது நயன்தாராவின் அடுத்த படத்தின் படப்பிடிப்பு!

  • IndiaGlitz, [Saturday,January 11 2020]

சூப்பர் ஸ்டார் ரஜினியுடன் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடித்த ’தர்பார்’ திரைப்படம் நேற்று முன்தினம் உலகம் முழுவதும் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்த நிலையில் நயன்தாரா நடித்த அடுத்த திரைப்படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட முடிந்து விட்டதாக தகவல்கள் வெளிவந்துள்ளது

பிரபல நடிகர் ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் நயன்தாரா முக்கிய வேடத்தில் நடித்து வந்த ’மூக்குத்தி அம்மன்’ என்ற திரைப்படத்தின் படப்பிடிப்பு கடந்த சில வாரங்களாக கன்னியாகுமரி மற்றும் அதன் சுற்றுப்புற பகுதியில் நடைபெற்று வந்தது தெரிந்ததே. இந்த நிலையில் தொடர்ச்சியாக 44 நாட்கள் இந்த படத்தின் படப்பிடிப்பு நடைபெற்ற நிலையில் தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட முடிவுக்கு வந்துள்ளதாக அதாவது 90 சதவிகித படப்பிடிப்பு முடிந்துவிட்டதாக ஆர்ஜே பாலாஜி தனது சமூக வலைப் பக்கத்தில் தெரிவித்துள்ளார்

இந்த படத்தின் படப்பிடிப்பில் நல்ல முறையில் ஒத்துழைப்பு கொடுத்த நடிகை நயன்தாராவுக்கு தன்னுடைய நன்றியை தெரிவித்துக் கொள்வதாகவும் அவர் கூறியுள்ளார். இதனை அடுத்து படக்குழுவினர் சென்னை திரும்ப உள்ளதாகவும் மீதி உள்ள படப்பிடிப்பு சென்னையில் நடைபெற்று முடிந்த உடன் தொழில்நுட்பப் பணிகள் தொடங்கப்படும் என்றும் கூறப்படுகிறது

இந்த படம் வரும் கோடை விடுமுறையில் வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர். வேல்ஸ் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனத்தின் தயாரிப்பில் கிரிஷ் இசையில் உருவாகியிருக்கும் இந்த படம் இந்த ஆண்டு நயன்தாராவுக்கு இந்த ஆண்டின் இரண்டாவது வெற்றிப்படமாக அமையலாம் என்று கருதப்படுகிறது

More News

கர்ப்பமா இருக்கீங்க போல.. கேள்வி கேட்ட பத்திரிக்கையாளருக்கு அதிரடியாக பதிலளித்த தீபிகா படுகோனே..!

கர்ப்பம் தொடர்பாகக் கேள்வி எழுப்பிய பத்திரிகையாளருக்கு அதிரடியாகப் பதிலளித்துள்ளார் தீபிகா படுகோன்.

நெல்லை கண்ணன் ரிலீஸ்.. அப்போ ஆபரேஷன் ஃபெயிலியர்..! H.ராஜாவை சீண்டிய சீமான்.

அப்பா நெல்லை கண்ணன் பிணையில் விடுதலை என்றும் பாஜகவின் எச்.ராஜா கூறிய ஆப்ரேஷன் சக்ஸஸ் என கூறிய பதிவிற்கு ஆப்ரேஷன் பெயிலியர் என்றும் கூறியுள்ளார். 

பாவம் மக்கள், மத்திய அரசு என்ன சொன்னாலும் நம்பிவிடுகிறார்கள்...! ப.சிதம்பரம்.

இந்தியர்களைப் போல பாவப்பட்ட மக்களை எங்கேயும் பார்த்ததில்லை என்றும், மத்திய அரசு அதன் திட்டங்கள் பற்றி என்ன சொன்னாலும் அதை நாட்டின் குடிமக்கள் நம்பிவிடுகிறார்கள் என்று கிண்டல் தொனியில் கருத்து தெரிவித்துள்ளார் ப.சிதம்பரம்.

போராட்டங்களுக்கு மத்தியில் நடுஇரவில் அமலுக்கு வந்த #CAA..!

குடியுரிமை திருத்த சட்டம் ஜனவரி 10ம் தேதி முதல் அமலுக்கு வருவதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும், இதற்கான விதிமுறைகள் வகுக்கும் முன்பாகவே அவசர அவசரமாக அமல்படுத்தப்பட்டுள்ளது கவனிக்கத்தக்கது.

புதை குழியில் சிக்கிக் கொண்ட யானை. போராடி மீட்கும் பொதுமக்கள்..! வீடியோ.

உணவு தேடி கிராமத்தில் புகுந்த யானைக் கூட்டத்தில் இருந்த ஒரு யானை தவறி அங்கிருந்த புதைகுழியில் விழுந்து உயிருக்குப் போராடிக்கொண்டிருந்தது.