close
Choose your channels

பகத் பாசில் - வடிவேலு படத்தின் கதை இதுதான்.. வடிவேலு ஜோடியாகும் 90களின் பிரபல நாயகி..!

Tuesday, January 2, 2024 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவான ’மாமன்னன்’ திரைப்படத்தில் பகத் பாசில் மற்றும் வடிவேலு இணைந்து நடித்த நிலையில் மீண்டும் இருவரும் இணைந்து நடிக்கும் படம் குறித்த அறிவிப்பு சமீபத்தில் வெளியானது என்பதை பார்த்தோம்.

சூப்பர் குட் பிலிம்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் பகத் பாசில் மற்றும் வடிவேலு முக்கிய கேரக்டரில் நடிக்கும் இந்த படத்தை அறிமுக இயக்குனர் கிருஷ்ணமூர்த்தி இயக்க இருப்பதாகவும் யுவன் சங்கர் ராஜா இசையில் உருவாகும் இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளதாகவும் செய்திகள் வெளியானது.

இந்த நிலையில் இயக்குனர் கிருஷ்ணமூர்த்தி இந்த படம் குறித்து கூறிய போது ’இது சாலையில் பயணம் செய்யும் ஒரு காமெடி படம் என்றும் ஒரு இளைஞர் மற்றும் ஒரு நடுத்தர வயதை சேர்ந்தவர் இருவர் நாகர்கோவில் முதல் பொள்ளாச்சி முதல் சாலையில் பயணம் செய்யும்போது ஏற்படும் அனுபவம் தான் இந்த கதை என்றும் கூறியுள்ளார்.

ஆரம்பத்தில் காமெடியாகவும் அதன்பின் த்ரில்லராக மாறும் இந்த படத்தின் கதை கடைசியில் ஒரு சமூக சிந்தனையை தூண்டும் கருத்தை தெரிவிக்கும் என்றும் இயக்குனர் தெரிவித்தார். இந்த படத்தின் படப்பிடிப்பு ஜனவரி 22ஆம் தேதி சென்னையில் தொடங்க இருப்பதாக கூறியுள்ளார்.

இந்த படத்தில் பகத் பாசிலுக்கு ஜோடி கிடையாது என்றும் ஆனால் அதே நேரத்தில் வடிவேலுக்கு ஜோடியாக 90களில் பிரபலமான நடிகையாக இருந்த சித்தாரா நடிக்க இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. சூப்பர் குட் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கும் 98 வது இந்த படம் இப்போதே நல்ல எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Related Videos