close
Choose your channels

90s கிட்ஸ்களை கவர்ந்த விளம்பர நடிகை.. புற்றுநோயால் பரிதாப மரணம்..!

Saturday, February 17, 2024 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கடந்த 90களில் சர்ப் எக்ஸெல் என்ற விளம்பரத்தின் நடித்ததன் மூலம் மிகப்பெரிய அளவில் பிரபலமான நடிகை புற்றுநோயால் காலமானதை அடுத்து ரசிகர்கள் அவரது மறைவிற்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

நடிகை, தயாரிப்பாளர், மாடல் அழகி என பன்முகத்துடன் செயல்பட்டு வந்த நடிகை கவிதா செளத்ரி நேற்று காலமானார். அவர் கடந்த சில ஆண்டுகளாக புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சையின் பலனின்றி நேற்று காலமானதை அடுத்து திரையுலகினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

தூர்தர்ஷன் தொலைக்காட்சியில் ’உதான்’ என்ற நிகழ்ச்சியின் மூலம் நடிகை கவிதா செளத்ரி மக்கள் மத்தியில் பிரபலமானார். கடந்த சில ஆண்டுகளுக்கு முன் கொரோனா வைரஸ் பாதிப்பின் போது கூட இந்த தொடர் மீண்டும் தூர்தர்ஷனில் ஒளிபரப்பப்பாகியது.

மேலும் கடந்த 90களில் சர்ப் எக்ஸெல் என்ற விளம்பரத்தில் இவர் நடித்ததால் அந்த விளம்பரம் மிகப்பெரிய அளவில் பிரபலமானது என்பதும் இந்த விளம்பரம் 90கள் ரசிகர்களை மிகப்பெரிய அளவில் கவர்ந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் நடிகை கவிதா செளத்ரி உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்த நிலையில் திடீரென ஏற்பட்ட மாரடைப்பு காரணமாக நேற்று காலமானார். அவருடைய மறைவுக்கு ரசிகர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment