சமந்தாவின் அடுத்த படத்தின் ஃபர்ஸ்ட்லுக் ரிலீஸ்

  • IndiaGlitz, [Tuesday,January 07 2020]

தமிழ் தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவரான சமந்தா நடிப்பில் கடந்த ஆண்டு வெளிவந்த சூப்பர் டீலக்ஸ், மஜிலி மற்றும் ஓ பேபி’ ஆகிய மூன்று திரைப்படங்களும் சூப்பர் ஹிட்டானது என்பது தெரிந்ததே.

இந்த நிலையில் இந்த ஆண்டு அவர் தமிழில் மாபெரும் வெற்றிபெற்ற ’96’ படத்தின் தெலுங்கு ரீமேக்கில் நடித்து வருகிறார். ’96’ படத்தின் இயக்குனர் பிரேம் குமார் இயக்கி வரும் இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

’96’ படத்தில் த்ரிஷாவின் கேரக்டரான ‘ஜானு’ என்ற பெயரை டைட்டிலாக வைக்கப்பட்டு உருவாகியிருக்கும் இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்போது வெளியாகியுள்ளது. விஜய்சேதுபதி கேரக்டரில் சர்வானந்த் நடித்து வரும் இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் அட்டகாசமாக இருப்பதாக நெட்டிசன்கள் பாராட்டி வருகின்றனர். இதனை அடுத்து இந்த படத்தின் அடுத்தகட்ட புரமோஷன் குறித்த செய்திகள் விரைவில் அறிவிக்கப்படும் என்றும் இந்த படம் வரும் காதலர் தினத்தில் வெளியாக வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.

More News

'தர்பார்' படம் பார்க்கும் சூர்யா ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'தர்பார்' திரைப்படம் நாளை மறுநாள் அதாவது ஜனவரி 9ஆம் தேதி உலகம் முழுவதும் பிரமாண்டமாக வெளியாகவுள்ளது.

'பட்டாஸ்' படத்தின் டிரைலர் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு

தனுஷ், சினேகா நடிப்பில் துரை செந்தில்குமார் இயக்கத்தில் சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகியுள்ள 'பட்டாஸ்' திரைப்படம் ஜனவரி 16 ஆம் தேதி வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படும்

விஜய்யின் 'மாஸ்டர்' படத்தை வாங்கிய விக்ரம் பட தயாரிப்பாளர்

தளபதி விஜய் நடித்து வரும் 64 வது படமான ;மாஸ்டர்; திரைப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தின் வியாபாரம் ஏற்கனவே ஆரம்பித்து விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது

கணவனை இழந்த பெண்ணின் 2 கள்ளக்காதலர்கள் அரிவாள் வெட்டு: சென்னையில் பரபரப்பு!

கணவரை இழந்த பெண் ஒருவருடன் கள்ளக்காதல் வைத்திருந்த இரண்டு கள்ள காதலர்கள் ஒருவருக்கொருவர் அரிவாளால் வெட்டிக் கொன்ற சம்பவம் சென்னையில் பட்டப்பகலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

துபாயில் வேலை பார்த்த எனக்கு சென்னைக்கு போக தெரியாதா? மனமுடைந்த இளம்பெண் தற்கொலை

துபாய்க்கு வேலைக்கு தனியாக செய்யும் செல்லும் தன்னால் சென்னைக்கு செல்ல முடியாதா