close
Choose your channels

சமந்தாவின் அடுத்த படத்தின் ஃபர்ஸ்ட்லுக் ரிலீஸ்

Tuesday, January 7, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தமிழ் தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவரான சமந்தா நடிப்பில் கடந்த ஆண்டு வெளிவந்த சூப்பர் டீலக்ஸ், மஜிலி மற்றும் ஓ பேபி’ ஆகிய மூன்று திரைப்படங்களும் சூப்பர் ஹிட்டானது என்பது தெரிந்ததே.

இந்த நிலையில் இந்த ஆண்டு அவர் தமிழில் மாபெரும் வெற்றிபெற்ற ’96’ படத்தின் தெலுங்கு ரீமேக்கில் நடித்து வருகிறார். ’96’ படத்தின் இயக்குனர் பிரேம் குமார் இயக்கி வரும் இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

’96’ படத்தில் த்ரிஷாவின் கேரக்டரான ‘ஜானு’ என்ற பெயரை டைட்டிலாக வைக்கப்பட்டு உருவாகியிருக்கும் இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்போது வெளியாகியுள்ளது. விஜய்சேதுபதி கேரக்டரில் சர்வானந்த் நடித்து வரும் இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் அட்டகாசமாக இருப்பதாக நெட்டிசன்கள் பாராட்டி வருகின்றனர். இதனை அடுத்து இந்த படத்தின் அடுத்தகட்ட புரமோஷன் குறித்த செய்திகள் விரைவில் அறிவிக்கப்படும் என்றும் இந்த படம் வரும் காதலர் தினத்தில் வெளியாக வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.