தமிழகத்தில் இன்று மட்டும் 98 பேர்களுக்கு கொரோனா பாதிப்பு: 1173ஆக உயர்ந்தது

தமிழகத்தில் தினமும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் உயிரிழந்தவர்கள் குறித்த தகவல்களை தமிழக அரசின் சுகாதாரத்துறை தெரிவித்து வரும் நிலையில் இன்று கொரோனாவால் 98 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக காதார செயலர் பீலா ராஜேஷ் தெரிவித்தார். இதனையடுத்து தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1173 ஆக உயர்ந்துள்ளது.

இன்று பாதிக்கப்பட்ட 98 பேர்களில் 91 பேர் தனியார் நிகழ்ச்சிக்கு சென்று திரும்பியவர்கள் மற்றும் அவர்களை சேர்ந்தவரகள் என்று சுகாதார செயலர் பீலா ராஜேஷ் அவர்கள் தெரிவித்துள்ளார். மேலும் தமிழகத்தில் மொத்தம் 58 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளதாகவும், தமிழகத்தில் 12,746 ரத்த மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாகவும் தமிழகத்தில் வீட்டுக் கண்காணிப்பில் 33,850 பேர் உள்ளனர் என்றும் 28 நாட்கள் தனிமையை முடித்தவர்கள் 63,380 பேர்கள் என்றும் சுகாதார செயலர் பீலா ராஜேஷ் தெரிவித்தார்.

மேலும் ரேபிட் டெஸ்ட் கருவிகள் 4 லட்சம் என்ற எண்ணிக்கையில் ஆர்டர் செய்துள்ளதாகவும் இந்த கருவிகள் இன்னும் ஓரிரு நாட்களில் தமிழகத்திற்கு வந்துவிடும் என்றும் சுகாதார செயலர் பீலா ராஜேஷ் கேள்வி ஒன்றுக்கு பதிலளித்தார்.

More News

கொரோனா வார்டில் பணிபுரியும் தாயை பார்த்த 6 வயது மகள்: ஒரு நெகிழ்ச்சியான வீடியோ

கொரோனா வார்டில் பணிபுரியும் தாயை ஒரு மாதத்திற்கு பின் பார்த்த 6 வயது மகள் பாசத்துடன் ஓடிவந்து கட்டியணைத்து கதறி அழுத காட்சியின் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது 

இன்னும் எத்தனை கொடுமைகளை பார்க்கணுமோ? சதீஷ் வீடியோவுக்கு நெட்டிசன் கமெண்ட்

சமீபத்தில் திருமணமான நடிகர் சதீஷ் தற்போது கொரோனா விடுமுறையில் வீட்டில் இருந்து வரும் நிலையில் அவ்வப்போது தனது சமூக வலைத்தளத்தில் சுவாரஸ்யமான வீடியோ மற்றும் புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்

ட்ரோன் மூலம் போதை வஸ்து விற்பனை செய்த இருவர் கைது!

நாடு முழுவதும் கொரோனா வைரஸ் மிக வேகமாக பரவி வருவதன் காரணமாக கடந்த 20 நாட்களாக ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. இந்த ஊரடங்கு காலத்தில் அத்தியாவசிய பொருட்கள் தவிர

கொரோனா எதிரொலி: தளபதி விஜய்யின் மிகப்பெரிய மனவருத்தம்

கொரோனா வைரஸ் இந்தியாவை மட்டுமின்றி உலகம் முழுவதையும் ஆட்டுவித்து வரும் நிலையில் படப்பிடிப்பு இல்லாமல் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள அனைத்து திரை நட்சத்திரங்களும் தங்களுடைய

கமல்ஹாசனுக்கு நன்றி தெரிவித்த கேரள காவல்துறை

உலக நாயகன் நடிகர் மற்றும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவரான கமலஹாசன் தன்னுடைய சமூக வலைப்பக்கத்தில் அவ்வப்போது கொரோனாவுக்கு எதிராக மத்திய, மாநில அரசுகள் எடுக்க வேண்டிய