செக் மோசடி வழக்கு: விஜய் நாயகிக்கு கைது வாரண்ட்

  • IndiaGlitz, [Sunday,October 13 2019]

விஜய் நடித்த ’புதிய கீதை’ படத்தின் நாயகியும் பாலிவுட் நடிகையுமான அமிஷா பட்டேல் மீது பதிவு செய்யப்பட்ட செக் மோசடி வழக்கில் தற்போது அவருக்கு எதிராக கைது வாரண்டை நீதிமன்றம் பிறப்பித்துள்ளது.

நடிகை அமிஷா பட்டேலும் அவருடைய பார்ட்னரும் படம் தயாரிக்க அஜய்குமார் சிங் என்பவரிடம் ரூ.2.5 கோடி கடன் வாங்கியிருந்தனர். 2018ஆம் ஆண்டு படம் வெளியாகும் என்றும் அப்போது அந்த பணத்தை திருப்பி தருவதாகவும் அமிஷா கூறியிருந்தார்.

இந்த நிலையில் 2018ஆம் ஆண்டு அந்த படம் வெளிவராததால் கடன் கொடுத்த அஜய்குமார் சிங், அமிஷா பட்டேலிடம் பணம் கேட்டுள்ளார். இதற்காக அசலும் வட்டியும் சேர்த்து ரூ.3 கோடிக்கு அமிஷா பட்டேல் செக் கொடுத்துள்ளார். ஆனால் இந்த செக் பவுன்ஸ் ஆகி திரும்பிவிட்டது. இதுகுறித்து போன் நோட்டீஸ் மூலம் அஜய்குமார் சிங் கேட்டபோது, அமிஷாவிடம் இருந்து எந்தவித பதிலும் வரவில்லை.

இதனையடுத்து அமீஷா பட்டேல் மீது அஜய்குமார் சிங் செக் மோசடி வழக்கை தாக்கல் செய்தார். இந்த வழக்கை விசாரணை செய்த நீதிமன்றம், அமிஷா பட்டேலுக்கு கைது வாரண்ட் பிறப்பித்துள்ளது.
 

More News

சந்தானம் நடிக்கும் அடுத்த படத்தில் இரண்டு நாயகிகள்!

நடிகர் சந்தானம் நடித்த 'தில்லுக்கு துட்டு 2', 'ஏ1' ஆகிய படங்கள் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றதை அடுத்து தற்போது அவர் 'ஜெயம் கொண்டான்', 'வந்தான் வென்றான்', 'சேட்டை போன்ற

அனுஷ்கா பட இயக்குனரின் அடுத்த படத்தில் ஹன்சிகா!

பிரபல கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்த் உடன் நடிகை ஹன்சிகா ஒரு திரைப்படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆனார் என்ற செய்தியை சமீபத்தில் பார்த்தோம்.

எங்க ஆட்டம்  வெறித்தனமா இருக்கும்! பிகில் டிரைலர்

தளபதி விஜய் நடிப்பில் இயக்குனர் அட்லியின் இயக்கத்தில் உருவாகியிருக்கும் பிகில் படத்தின் டிரைலர் சற்றுமுன் வெளியான நிலையில் இந்த டிரைலர் வெறித்தனமாக இருப்பதாக விமர்சனங்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றது

'பிகில்' படத்தில் அரசியல் உண்டா? அர்ச்சனா கல்பாதி 

கடந்த சில ஆண்டுகளாக விஜய் படம் என்றாலே அதில் அரசியல் இல்லாமல் இருக்காது. 'தலைவா' படம் முதல் சமீபத்தில் வெளியான 'சர்க்கார்' படம் வரை விஜய் படத்தில் அரசியல் இருப்பதும்,

'மிக மிக அவசரம்' ரிலீஸ் பிரச்சனை: தயாரிப்பாளர் சங்கத்தின் அதிரடி அறிக்கை

தயாரிப்பாளர் மற்றும் இயக்குனர் சுரேஷ் காமாட்சியின் 'மிக மிக அவசரம்' திரைப்படம் நேற்று வெளியாகவிருந்த நிலையில் திடீரென இந்த படத்திற்கு திரையரங்குகள் மறுக்கப்பட்டதால்