close
Choose your channels

அனுஷ்கா பட இயக்குனரின் அடுத்த படத்தில் ஹன்சிகா!

Saturday, October 12, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிரபல கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்த் உடன் நடிகை ஹன்சிகா ஒரு திரைப்படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆனார் என்ற செய்தியை சமீபத்தில் பார்த்தோம். மேலும் அவர் சிம்புவுடன் ’மகா’ என்ற த்ரில் படத்திலும் நடித்து வருகிறார் என்பதும் அந்தப் படம் விரைவில் வெளியாக உள்ளது என்பதும் தெரிந்ததே.

இந்த நிலையில் தற்போது அனுஷ்கா ஷெட்டி நடித்த ’பாகமதி’ படத்தை இயக்கிய அசோக் இயக்கத்தில் ஒரு வெப்சீரிஸ் நடிக்க ஹன்சிகா ஒப்பந்தம் ஆகியுள்ளார். இது ஒரு விறுவிறுப்பான திகில் தொடர் என்றும் இந்தத் தொடர் தொலைக்காட்சி ரசிகர்களிடையே ஹன்சிகாவுக்கு நல்ல பெயரை பெற்றுத் தரும் என்று நம்பப்படுகிறது.

ஏற்கனவே தமிழ் திரையுலகின் முன்னணி நடிகைகளான அஞ்சலி, அமலாபால் ஆகியோர் வெப்சீரீஸில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ள நிலையில் தற்போது ஹன்சிகாவின் அந்த பட்டியலில் இணைந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.