ரகசிய திருமணம் செய்த கமல் பட நடிகைக்கு பெண் குழந்தை: கணவர் தகவல்

  • IndiaGlitz, [Saturday,January 02 2021]

கமல்ஹாசனின் விஸ்வரூபம், உத்தமவில்லன் உள்ளிட்ட படங்களில் நடித்த நடிகைக்கு திருமணம் ஆன தகவலே வெளியே தெரியாத நிலையில் தற்போது குழந்தை பிறந்த தகவலை அவரது கணவர் தெரிவித்துள்ளார்.

கமல்ஹாசன் நடித்த விஸ்வரூபம், உத்தமவில்லன் மற்றும் ’மீன் குழம்பும் மண் பானையும்’ உள்ளிட்ட படங்களில் நடித்தவர் பூஜா குமார். அமெரிக்காவைச் சேர்ந்த இவர் சமீபத்தில் கமல்ஹாசனின் குடும்ப நிகழ்ச்சி ஒன்றில் அவருடன் கலந்து கொண்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் தனது மனைவி பூஜாகுமாருக்கு பெண் குழந்தை பிறந்துள்ளதக பூஜாகுமாரின் கணவர் விஷால் ஜோஷி என்பவர் சமூக வலைத்தளத்தில் தெரிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த பதிவுக்கு பின்னர் தான் பூஜா குமார் தனது திருமணத்தை ரகசியமாக வைத்திருந்துள்ளார் என்பது தற்போது தெரியவந்துள்ளது.

இதுகுறித்து பூஜா குமாரின் கணவர் விஷால் ஜோஷி தனது சமூக வலைதளத்தில் கூறியதாவது: ஒரு காலத்தில் நாங்கள் இரண்டு பேர் தான் இருந்தோம். இப்போதும் மூன்று பேர். எங்கள் குட்டி மகள் நாவ்யா ஜோஷியை உங்கள் அனைவருக்கும் அறிமுகப்படுத்துவதில் நானும் பூஜாவும் உற்சாகமடைகிறோம். எனக்கு மிகச் சிறந்த வாழ்க்கைத் துணையாக இருப்பதற்கு, குட்டி நாவ்யாவை இந்த உலகத்துக்கு அழைத்து வந்ததற்கு நன்றி பூஜா. எனது இந்த பிறந்தநாளை என் வாழ்நாளின் மிகச் சிறந்த பிறந்தநாளாக மாற்றிவிட்டாய். உங்கள் இருவரையும் அவ்வளவு நேசிக்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.

More News

ஷிவானி குறித்து பேசிய ஆரியை அடிக்க பாய்ந்த பாலாஜி!

பிக்பாஸ் வீட்டில் நேற்று லக்சரி டாஸ்க் முடிவடைந்ததில் இருந்தே ஆரி மற்றும் பாலா சண்டை தொடர்ச்சியாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் சற்றுமுன் வெளியான இன்றைய

பிசிசிஐ தலைவர் சௌரவ் கங்குலி மருத்துவமனையில் அனுமதி!

முன்னாள் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனும் தற்போதைய பிசிசிஐ தலைவருமான சௌரவ் கங்குலி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக செய்திகள்

தமிழக காங்கிரஸில் முக்கிய பதவியை பெற்ற தமிழ் நடிகர்!

கடந்த சில மாதங்களாக பல திரையுலக பிரமுகர்கள் பாஜகவிற்கு சென்று கொண்டிருக்கும் நிலையில் தற்போது தமிழ் நடிகர் ஒருவருக்கு காங்கிரஸ் கட்சியில் முக்கிய பதவி கொடுக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடதக்கது

ஆஸ்திரேலியாவில் தளபதி விஜய்யின் 'மாஸ்டர்' செய்த சாதனை!

தளபதி விஜய் நடித்த 'மாஸ்டர்' திரைப்படம் வரும் 13ஆம் தேதி தமிழகம் மட்டுமின்றி உலகம் முழுவதும் ரிலீஸ் ஆக உள்ளது என்பதும் என்றும் தமிழ், தெலுங்கு, கன்னடம் மட்டுமின்றி

எனக்கு எதிராக தேர்தலில் போட்டியிட தயாரா? உதயநிதிக்கு சவால்விட்ட நடிகை!

வரும் சட்டமன்ற தேர்தலில் என்னை எதிர்த்து போட்டியிட தயாரா என நடிகரும் திமுக இளைஞர் அணி செயலாளருமான உதயநிதிக்கு சவால் விட்ட நடிகை ஒருவரால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது