ரகசிய திருமணம் செய்த கமல் பட நடிகைக்கு பெண் குழந்தை: கணவர் தகவல்


Send us your feedback to audioarticles@vaarta.com


கமல்ஹாசனின் விஸ்வரூபம், உத்தமவில்லன் உள்ளிட்ட படங்களில் நடித்த நடிகைக்கு திருமணம் ஆன தகவலே வெளியே தெரியாத நிலையில் தற்போது குழந்தை பிறந்த தகவலை அவரது கணவர் தெரிவித்துள்ளார்.
கமல்ஹாசன் நடித்த விஸ்வரூபம், உத்தமவில்லன் மற்றும் ’மீன் குழம்பும் மண் பானையும்’ உள்ளிட்ட படங்களில் நடித்தவர் பூஜா குமார். அமெரிக்காவைச் சேர்ந்த இவர் சமீபத்தில் கமல்ஹாசனின் குடும்ப நிகழ்ச்சி ஒன்றில் அவருடன் கலந்து கொண்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் தனது மனைவி பூஜாகுமாருக்கு பெண் குழந்தை பிறந்துள்ளதக பூஜாகுமாரின் கணவர் விஷால் ஜோஷி என்பவர் சமூக வலைத்தளத்தில் தெரிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த பதிவுக்கு பின்னர் தான் பூஜா குமார் தனது திருமணத்தை ரகசியமாக வைத்திருந்துள்ளார் என்பது தற்போது தெரியவந்துள்ளது.
இதுகுறித்து பூஜா குமாரின் கணவர் விஷால் ஜோஷி தனது சமூக வலைதளத்தில் கூறியதாவது: ஒரு காலத்தில் நாங்கள் இரண்டு பேர் தான் இருந்தோம். இப்போதும் மூன்று பேர். எங்கள் குட்டி மகள் நாவ்யா ஜோஷியை உங்கள் அனைவருக்கும் அறிமுகப்படுத்துவதில் நானும் பூஜாவும் உற்சாகமடைகிறோம். எனக்கு மிகச் சிறந்த வாழ்க்கைத் துணையாக இருப்பதற்கு, குட்டி நாவ்யாவை இந்த உலகத்துக்கு அழைத்து வந்ததற்கு நன்றி பூஜா. எனது இந்த பிறந்தநாளை என் வாழ்நாளின் மிகச் சிறந்த பிறந்தநாளாக மாற்றிவிட்டாய். உங்கள் இருவரையும் அவ்வளவு நேசிக்கிறேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments