இசைஞானி இசையில் உருவாகும் ஆங்கிலம், பான் இந்தியா திரைப்படம் குறித்த அப்டேட்!

  • IndiaGlitz, [Tuesday,February 15 2022]

இசைஞானி இளையராஜா இசையமைக்கும் 1,422 ஆவது திரைப்படம் குறித்த அறிவிப்பு நேற்று வெளியாகியது. காதலர் தினத்தையொட்டி வெளியான இந்த அறிவிப்பில் பல சுவாரசியமான தகவல்கள் கூறப்பட்டுள்ளன.

கன்னட இயக்குநரான அஜித் வாசன் உஜ்ஜினா என்பவர் இயக்கவிருக்கும் புதுத் திரைப்படம் “A Beautiful breakup”. இந்தத் திரைப்படம் தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி மற்றும் ஆங்கில மொழிகளில் உருவாக்கப்படவுள்ள நிலையில் இந்தத் திரைப்படத்திற்கு இசைஞானி இளையராஜா இசையமைக்க இருக்கிறார். இது அவருக்கு 1,422 ஆவது திரைப்படம் என்பதும் குறிப்பிடத்தக்கது.

காதல் மற்றும் த்ரில்லரை கதைக்களமாக வைக்கு எடுக்கப்படும் இந்த திரைப்படம் லண்டன் மற்றும் இந்தியாவில் நடைபெறுவதாக அமைக்கப் பட்டுள்ளதாகவும் இருவர் மட்டுமே இந்தத் திரைப்படத்தில் இருப்பார்கள் என்றும் படக்குழு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் வரும் மே மாதத்தில் இந்தத் திரைப்படம் வெளியிடப்படும் எனக் கூறப்பட்டுள்ளது.

இசைஞானி இளையராஜா பல தலைமுறைகளைத் தாண்டி தனது இசையால் ரசிகர்களை மகிழ்வித்து வருகிறார். அந்த வகையில் கடந்த 1975 இல் இசையமைக்க ஆரம்பித்த அவர் இதுவரை 9 மொழிகளில் 1,400 க்கும் மேற்பட்ட திரைப்படங்களுக்கு இசையமைத்துள்ளார். தற்போது 1,422 ஆவது திரைப்படமாக A Beautiful breakup திரைப்படம் அமைந்திருக்கிறது. காதலர் தினத்தை முன்னிட்டு இதுகுறித்த அறிவிப்பை நேற்று படக்குழு வெளியிட்டு இருப்பதும் குறிப்பிடத்தக்கது.

More News

சிம்புவின் 50வது படத்தை இயக்கப்போவது இந்த பிரபலமா?

சிம்பு நடித்த 47வது திரைப்படமான 'மாநாடு' திரைப்படம் மிகப் பெரிய வெற்றி பெற்ற நிலையில் அவர் நடிக்க இருக்கும் 48வது திரைப்படமாக 'பத்து தல' திரைப்படமும் 49வது திரைப்படமாக 'கொரோனா குமார்' என்ற

அவார்டு வின்னிங் ஹீரோவை லவ் பண்றேன்: பிக்பாஸ் வனிதா 

தேசிய விருது பெற்ற நடிகர் ஒருவரை தற்போது காதலிப்பதாக பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் வனிதா கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

'அஜித் 61' கெட்டப் இதுதான்: அஜித் மேனேஜரின் டுவிட் வைரல்

அஜித் நடித்துள்ள 'வலிமை' திரைப்படம் வரும் 24-ஆம் தேதி ரிலீஸாக உள்ள நிலையில் அவரது அடுத்த திரைப்படமான 'அஜித் 61' திரைப்படத்தின் படப்பிடிப்பு மார்ச் மாதம் தொடங்க உள்ளது.

ஷங்கரின் அடுத்த படத்தில் எஸ்.ஜே.சூர்யா?

பிரமாண்ட இயக்குனர் ஷங்கரின் அடுத்த திரைப்படத்தில் எஸ்ஜே சூர்யா நடிக்க இருப்பதாக வெளி வந்திருக்கும் செய்தி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது .

புதுக்காதலருடன் டேட்டிங்: கணவரை விவாகரத்து செய்கிறாரா ரஜினி, விஜய், தனுஷ் பட நடிகை!

ரஜினிகாந்த், விஜய் , தனுஷ் உள்பட பிரபலங்களுடன் நடித்த நடிகை ஒருவர் புது காதலருடன் டேட்டிங் செய்து வருவதாகவும் விரைவில் அவர் தனது கணவரை விவாகரத்து செய்யப்போவதாகவும் கூறப்படுவது