close
Choose your channels

ஷங்கரின் அடுத்த படத்தில் எஸ்.ஜே.சூர்யா?

Tuesday, February 15, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிரமாண்ட இயக்குனர் ஷங்கரின் அடுத்த திரைப்படத்தில் எஸ்ஜே சூர்யா நடிக்க இருப்பதாக வெளி வந்திருக்கும் செய்தி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் தற்போது ராம்சரண் தேஜா நடித்து வரும் திரைப்படத்தை இயக்கி வருகிறார் என்பதும் இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பது தெரிந்ததே.

இந்த படத்தின் நாயகியாக கைரா அத்வானி நடித்து வரும் நிலையில் இந்த படத்தின் வில்லன் யார் என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது. இந்த நிலையில் விஜய்யின் ‘மெர்சல்’, மகேஷ்பாபுவின் ’ஸ்பைடர்’, சிம்புவின் ‘மாநாடு’ உள்பட சில படங்களில் ஏற்கனவே வில்லனாக நடித்துள்ள எஸ்.ஜே.சூர்யா, ஷங்கர்- ராம் சரண் தேஜா படத்திலும் வில்லனாக நடிக்க பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும் இதற்காக அவருக்கு மிகப் பெரிய தொகை சம்பளமாக பேசப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஏற்கனவே ஷங்கர் இயக்கத்தில் விஜய் நடித்த ’நண்பன்’ திரைப்படத்தில் ஒரு சிறு கேரக்டரில் எஸ்.ஜே.சூர்யா நடித்து இருந்தார் என்பது அனைவரும் அறிந்ததே.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.