யூடியூப் வீடியோக்களுக்கு சென்சாரா? சென்னை ஐகோர்ட்டில் வழக்கு!

  • IndiaGlitz, [Wednesday,July 29 2020]

யூடியூப், டுவிட்டர், பேஸ்புக் ஆகியவற்றில் வீடியோக்களை பதிவு செய்வது என்பது ஒரு பொழுதுபோக்காக இருந்த நிலை மாறி தற்போது வருமானத்திற்காக யூடியூப் வீடியோக்களை பதிவு செய்யும் போக்கு அதிகரித்து கொண்டே வருகிறது. அதிக வருமானம் பெறுவதற்காக, அதிக பார்வையாளர்களை வரவழைப்பதற்காக சில சர்ச்சைக்குரிய விஷயங்களை கையிலெடுத்து சர்ச்சைக்குரிய வீடியோக்களை ஒரு சிலர் பதிவு செய்து வருவதால் போலீஸ் புகார், நீதிமன்ற வழக்கு என சில யூடியூப் பயனாளிகள் சந்தித்து வருகின்றனர்.

சமீபத்தில் கூட ஒரு நடிகையின் திருமணம், கந்தசஷ்டி விவகாரம் உள்பட ஒருசில சர்ச்சைக்குரிய யூடியூப் வீடியோக்களால் பெரும் பிரச்சனை ஏற்பட்டது என்பது தெரிந்ததே. இந்த நிலையில் யூடியூப், ஃபேஸ்புக், ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலை தளங்களில் வீடியோக்களை பதிவு செய்வதில் சென்சார் முறை கொண்டு வரப்பட வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி வருகின்றனர்

அந்த வகையில் தற்போது சென்னை ஐகோர்ட்டில் இது குறித்து மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. யூடியூப், ஃபேஸ்புக், ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பதிவு செய்யப்படும் வீடியோக்களை தணிக்கை செய்ய தனி வாரியம் அமைக்க கோரி வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வர உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

யூடியூப் உள்பட சமூக வலைதளங்களில் தினமும் லட்சக்கணக்கில், கோடிக்கணக்கில் வீடியோக்கள் பதிவு செய்யப்படுவதால் அவை அனைத்தையும் தணிக்கை செய்வது செய்வது சாத்தியமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்
 

More News

கொரோனா விவகாரத்திலும் அதிரடி காட்டும் ரூபா ஐபிஎஸ்!!!

கர்நாடக பரப்பன அக்ரஹார சிறையில் சிறைத்துறை டிஐஜி யாக இருந்தவர் ரூபா ஐபிஎஸ். இவர் குற்றம் சாட்டப்பட்டு சிறையில் இருக்கும்

உண்மையிலேயே கொரோனாவின் பிறப்பிடம் இதுதான்… உறுதிப்படுத்திய உலக விஞ்ஞானிகள் குழு!!!

கொரோனா வைரஸின் பிறப்பிடம் எது என்பதைக் குறித்து உலக விஞ்ஞானிகள் 3 குழுக்களாகப் பிரிந்து ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.

ரஜினியும், கமலும் சேர்ந்தால் கமல்தான் முதல்வர் வேட்பாளர்: மநீம பொதுச்செயலாளர் 

2021 ஆம் ஆண்டு நடைபெற உள்ள சட்டப்பேரவைத் தேர்தல் தமிழக அரசியலுக்கு வித்தியாசமான தேர்தலாக இருக்கும் என்று கருதப்படுகிறது. அதிமுக, திமுக கூட்டணி மட்டுமின்றி

பொது இடத்தில் காதலருக்கு லிப்லாக் கொடுத்த நடிகை: வைரலாகும் வீடியோ

பிரபல கவர்ச்சி நடிகை பூனம்பாண்டே தனது நீண்ட நாள் காதலரான சாம் பாம்பே என்பவரை திருமணம் செய்ய சமீபத்தில் நிச்சயதார்த்த மோதிரம் மாற்றினார் என்பதையும்

என்னுடைய அரசியல் வாழ்வு ரஜினி ஆதரவோடு முடிந்துவிடும்: அரசியல் கட்சி தலைவர்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் கடந்த 2017 ஆம் ஆண்டு டிசம்பர் 31ம் தேதி தான் அரசியலில் குதிக்க இருப்பதாகவும், தான் ஆரம்பிக்க இருக்கும் அரசியல் கட்சி, வரும் சட்டமன்ற பொதுத் தேர்தலில்