ஏ.ஆர்.முருகதாஸ் மீது தேசத்துரோக நடவடிக்கை எடுக்க சென்னை கமிஷனரிடம் புகார்

  • IndiaGlitz, [Thursday,November 08 2018]

தளபதி விஜய் நடித்த 'சர்கார்' திரைப்படம் கடந்த இரண்டு நாட்களாக ஒருசில கட்சிகளின் அரசியல்வாதிகளின் கண்டனங்களை பெற்று வரும் நிலையில் இந்த படத்தின் இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் மீது தேசத்துரோக நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர் தேவராஜன் என்பவர் சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.

இந்த படத்தில் இடம்பெற்றுள்ள ஒரு காட்சியில் தமிழக அரசு கொடுத்த இலவச பொருட்களை பொதுமக்கள் தீயில் இட்டு கொளுத்துவது போன்று உள்ளது. இந்த காட்சியில் ஏ.ஆர்.முருகதாஸ் அவர்களே ஒரு பொருளை தீயில் போடுவார். இந்த காட்சி அரசின் திட்டங்களை இழிவுபடுத்துவது போன்றும் மக்களின் மனதை புண்படுத்துவது போன்று இருப்பதாகவும் சமூக ஆர்வலர் தேவராஜன் தனது புகாரில் தெரிவித்துள்ளார்.

மேலும் இந்த காட்சிகள் அரசுக்கு எதிராக வன்முறையை தூண்டும் வகையில் இருப்பதால் இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் மீது தேசத்துரோக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் தனது புகார் மனுவில் குறிப்பிட்டுள்ளார். இந்த புகார் மனு மீது சென்னை போலீசார் நடவடிக்கை எடுப்பார்களா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்

More News

சர்கார் படம் ஓடும் தியேட்டர் முன் அதிமுகவினர் போராட்டம். மதுரையில் பரபரப்பு

தளபதி விஜய் நடித்த படம் என்றாலே ரிலீசுக்கு முன்னரும், ரிலீசுக்கு பின்னரும் பிரச்சனைகளை சந்திப்பது வழக்கமான ஒன்றே.

'சர்கார்' வரலட்சுமி கேரக்டர் குறித்து டிடிவி தினகரன் கருத்து

தளபதி விஜய் நடித்த 'சர்கார்' திரைப்படம் குறித்து தமிழக அமைச்சர்கள் கடும் கண்டன்ங்களை தெரிவித்து வரும் நிலையில் வைகோ உள்பட ஒருசில அரசியல்வாதிகள் இந்த படத்திற்கு தங்கள் ஆதரவையும் தெரிவித்துள்ளனர்.

'சர்கார்' வெற்றிக்கு அமைச்சர்கள் பாடுபடுகின்றனர். பழ.கருப்பையா

தளபதி விஜய் நடித்த 'சர்கார்' திரைப்படம் கடந்த 6ஆம் தேதி வெளியாகி மிகப்பெரிய ஓப்பனிங் வசூலை பெற்று சாதனை செய்து கொண்டிருக்கும் நிலையில்

விஜய் மீது வழக்கா? வழக்கறிஞருடன் அமைச்சர் சி.வி.சண்முகம் திடீர் சந்திப்பு

தளபதி விஜய் நடித்த 'சர்கார்' திரைப்படம் வெளியாகி இரண்டு நாட்கள் ஆகிவிட்ட நிலையில் இந்த படத்தில் இடம்பெற்றுள்ள ஒருசில காட்சிகள், வசனங்கள் குறித்து

அனுஷ்கா-மாதவன் நடிக்கும் படத்தின் டைட்டில் அறிவிப்பு

கடந்த 2006ஆம் ஆண்டு மாதவன் நடித்த 'ரெண்டு' என்ற படத்தின் மூலம் தமிழில் அறிமுகமான நடிகை அனுஷ்கா அதன் பின்னர் அருந்ததி', 'வேட்டைக்காரன்', 'சிங்கம்', 'பாகுபலி' உள்பட பல திரைப்படங்களில் நடித்தார்.