விக்னேஷ் சிவன் - நயன்தாரா மீது கமிஷனர் அலுவலகத்தில் புகார்: புகார் கொடுத்தவர் யார் தெரியுமா?

இயக்குனர் விக்னேஷ் சிவன் மற்றும் நடிகை நயன்தாரா கடந்த செப்டம்பர் 9-ஆம் தேதி திருமணம் நடந்த நிலையில் சரியாக நான்கே மாதத்தில் தாங்கள் இரட்டை குழந்தைகளுக்கு பெற்றோர்கள் ஆகி விட்டதாக அறிவித்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

இந்த நிலையில் இந்திய சட்ட திட்டங்களுக்கு உட்பட்டு அவர்கள் வாடகை தாய் மூலம் குழந்தை பெற்றார்களா? என்பது குறித்து விசாரணை செய்யப்படும் என சுகாதாரத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் அவர்கள் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் விக்னேஷ் சிவன், நயன்தாரா தம்பதிகள் மீது வழக்கறிஞர் சங்க தலைவர் என்பவர் சார்லஸ் அலெக்சாண்டர் என்பவர் சென்னை மாநகர காவல்துறை ஆணையரிடம் புகார் அளித்துள்ளார்.

அந்த புகாரில் திருமணமாகி ஓராண்டு நிறைவடைந்து குழந்தை பிறக்க வாய்ப்பில்லை என்ற நிலையில்தான் செயற்கை கருத்தரிப்பு முறையை கடைபிடிக்க முடியும் என்றும் ஆனால் திருமணமான நான்கே மாதங்களில் இரட்டை ஆண் குழந்தை பிறந்ததாக விக்னேஷ் சிவன் - நயன்தாரா தெரிவித்திருப்பது சட்டத்தை மீறிய செயல் என்றும் இது சமூக சீர்கேட்டை ஊக்குவிக்கும் நோக்கில் உள்ளதால் அவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார்.

இது குறித்து சென்னை காவல்துறை ஆணையர் என்ன நடவடிக்கை எடுப்பார் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

More News

'PS1' வெற்றிக்கு பின் கார்த்திக்கு 'சர்தார்', ஜெயம் ரவிக்கு என்ன தெரியுமா?

சமீபத்தில் வெளியான 'பொன்னியின் செல்வன்' திரைப்படம் மிகப் பெரிய வெற்றி பெற்ற நிலையில், இந்த படம் 100 வருட தமிழ் சினிமாவில் அதிக வசூல் செய்த படம் என்ற சாதனையை செய்துள்ளது

முதல்வர் ஸ்டாலின் தந்த இன்ப அதிர்ச்சி: நெகிழ்ச்சி அடைந்த தமிழ் இயக்குனர்!

தமிழ் திரைப்பட இயக்குனருக்கு தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அளித்த இன்ப அதிர்ச்சியால் அந்த இயக்குனர் நெகிழ்ச்சி அடைந்துள்ளார். 

4 பேருக்கு நல்லது பண்ணினாலும் 40 ஆயிரம் பேருக்கு தெரியற மாதிரி பண்ணனும்: 'சர்தார்' டிரைலர்

கார்த்தி நடித்த 'சர்தார்' திரைப்படம் வரும் தீபாவளி முதல் ரிலீஸாக இருக்கும் நிலையில் இந்த படத்தின் ட்ரெய்லர் தற்போது வெளியாகியுள்ளது. இரண்டு நிமிடங்களுக்கு மேல் ஓடும் இந்த டிரைலரில்

யாரும் சீட்டில் உட்கார்ந்து படம் பார்க்க மாட்டார்கள்: 'வாரிசு' குறித்து பிரபலம் டுவிட்!

திரையரங்குகளில் விஜய்யின் 'வாரிசு' படத்தை யாரும் சீட்டில் உட்கார்ந்து படம் பார்க்க மாட்டார்கள் என பிரபலம் ஒருவர் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

'நீ கொஞ்சாமலே நெஞ்சுக்குள்ள பெயினு பெயினு: 'பிரின்ஸ்' சிங்கிள் பாடல் ரிலீஸ்!

நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவான 'பிரின்ஸ்' திரைப்படம் வரும் தீபாவளி அன்று பிரமாண்டமாக உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது என்பதும் இந்த படம் ரிலீசுக்கு