நிலவேம்பு டுவீட்: கமல் மீது கமிஷனர் அலுவலகத்தில் புகார் 

  • IndiaGlitz, [Thursday,October 19 2017]

டெங்கு காய்ச்சலுக்காக விநியோகம் செய்துவரும் நிலவேம்பு குடிநீர் குறித்து கமல் நேற்று தனது டுவிட்டரில் பதிவு செய்திருந்த டுவிட்டுக்களுக்கு ஏற்கனவே பாஜக தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வரும் நிலையில் தற்போது அவர் மீது சென்னை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் ஒன்று அளிக்கப்பட்டுள்ளது.

தேவராஜன் என்பவர் கொடுத்துள்ள இந்த புகாரில் நிலவேம்பு கசாயம் குறித்து தவறான கருத்துக்களை நடிகர் கமல்ஹாசன் பரப்பி வருவதாகவும், இதற்காக அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளதாக தெரிகிறது. இந்த புகார் குறித்து சென்னை கமிஷனர் அலுவலகம் எந்தவிதமான நடவடிக்கை எடுக்க போகிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்

முன்னதாக கமல்ஹாசன் தனது டுவிட்டரில், 'சரியான ஆராய்ச்சி முடிவுகள் கிடைக்கும் வரை நம் இயக்கத்தார் நிலவேம்பு  விநியோகத்தில் ஈடுபடாதிருக்க கேட்டுக்கொள்கிறேன். மற்ற பணிகள் தொடரட்டும்' என்றும், 'ஆராய்ச்சி அலோபதியார்தான் செய்யவேண்டுமென்றில்லை பாரம்பரியக காவலர்களே செய்திருக்கவேண்டும். மருந்துக்கு பக்கவிளைவுண்டு என்பதும் பாரம்பரியம்தான்' என்றும் பதிவு செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

More News

தளபதியின் மெர்சலுக்கு பிரபலங்களின் பாராட்டு

தளபதி விஜய்யின் 'மெர்சல்' திரைப்படம் நேற்று வெளியாகி பாசிட்டிவ் விமர்சனங்களை பெற்று திரையரங்குகளில் பெரும் வரவேற்பையும் வசூல்களையும் பெற்று வருகிறது.

'மெர்சல்' படத்தில் ஜிஎஸ்டி காட்சியை நீக்க வேண்டும்: தமிழிசை 

விஜய் நடித்த 'மெர்சல்' திரைப்படம் நேற்று வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வரும் நிலையில் வழக்கம்போல் இந்த படத்திற்கு நெகட்டிவ் விமர்சனங்களை சமூக வலைத்தளங்களில் பதிவு செய்து வருகின்றனர்.

நிலவேம்பு கசாயம்: கமல் கருத்துக்கு தமிழிசை, விஜயபாஸ்கர் கண்டனம்

டெங்கு காய்ச்சலுக்கு அளிக்கப்பட்டு வரும் நிலவேம்பு கசாயத்தை தனது ரசிகர்கள் பொதுமக்களுக்கு விநியோகம் செய்ய வேண்டாம் என்றும் இந்த கசாயம் குறித்த ஆராய்ச்சிக்கு பின்னர் இந்த பணியை தொடரலாம்,

'எனை நோக்கி பாயும் தோட்டா' இசையமைப்பாளர் அறிவிப்பு

கவுதம் மேனன் இயக்கத்தில் தனுஷ், மேகா ஆகாஷ் நடித்து வரும் 'எனை நோக்கி பாயும் தோட்டா' படத்தின் இசையமைப்பாளர் யார் என்பதை அறிவிக்காமல் படக்குழுவினர் இதுவரை சஸ்பென்ஸ் ஆக வைத்திருந்தனர்.

என்னை போலவே பிரதமரும் மன்னிப்பு கேட்க வேண்டும்: கமல்ஹாசன்

நரேந்திர மோடி கடந்த ஆண்டு அறிவித்த உயர்மதிப்பு கொண்ட ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என்ற அறிவிப்புக்கு முதலில் அரசியல் தலைவர்கள், ரஜினி, கமல் முதல் பல நடிகர்கள் ஆதரவு தெரிவித்தனர்.