close
Choose your channels

தளபதியின் மெர்சலுக்கு பிரபலங்களின் பாராட்டு

Thursday, October 19, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தளபதி விஜய்யின் 'மெர்சல்' திரைப்படம் நேற்று வெளியாகி பாசிட்டிவ் விமர்சனங்களை பெற்று திரையரங்குகளில் பெரும் வரவேற்பையும் வசூல்களையும் பெற்று வருகிறது. இந்த நிலையில் நேற்றைய முதல் நாள் முதல் காட்சியில் சென்னையில் பல திரையரங்குகளில் திரையுலக பிரபலங்கள் இந்த படத்தை பார்த்து ரசித்து பின்னர் தங்கள் சமூக வலைத்தளங்களில் பாராட்டியுள்ளனர்.

இயக்குனர் கார்த்திக் நரேன்: தளபதி நெருப்பு போல உள்ளார். அவருடைய கடின உழைப்பு, அர்ப்பணிப்பு ஆகியவை படத்தில் தெரிகிறது. மெர்சல்' டைட்டிலே அனைத்தையும் புரிய வைக்கும்

சிவகார்த்திகேயன்: மெர்சல் திரைப்படம் பெரும் வெற்றி பெற எனது வாழ்த்துக்கள்

பிக்பாஸ் ஹரிஷ் கல்யாண்; தளபதி விஜய் அண்ணா உயர்ந்து நிற்கின்றார். மிக அருமையான நடிப்பும், கடைசியில் கூறும் மெசேஜூம் சூப்பர் 

கஸ்தூரி: கமல் எட்டடி பாஞ்சா விஜய் நாற்பத்து எட்டடி பாய்கிறார். அட்லி குழுவினர்களுக்கு வாழ்த்துக்கள்

ரம்யா நம்பீசன்: உண்மையிலேயே மிகச்சிறந்த படம். விஜய் மீதான மரியாதை உயர்கிறது. என்ன ஒரு சூப்பர் ஸ்டார். அட்லியின் மிகச்சிறந்த வொர்க்

சாந்தனு: முதல் நாள் முதல் காட்சியில் கத்தி கத்தி எனக்கு தொண்டையே கட்டிவிட்டது. தளபதியின் ரோல் மாஸ்

நடிகர் சதீஷ்: தளபதி விஜய்யின் அசாதாரணமான மாஸ் நடிப்பு. வெற்றி, மாறன், தளபதிக்கு வாழ்த்துக்கள்

விக்ரம் பிரபு: மெர்சல் குழுவினர்களின் மிகப்பெரிய பணி

நடிகை ஸ்ரீதிவ்யா: இளையதலைமுறை இயக்குனர்களுக்கு அட்லி ஒரு முன்னோடி. விஜய் 100% உழைப்பை கொட்டியுள்ளார்.

சிபி: தீபாவளிக்கு சரியான விருந்து. எமோஷனல் கதை மற்றும் தளபதியின் நடிப்பு பிரமாதம்

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.