ஃபானி புயலால் குடியிருப்பு பகுதிகளில் விழுந்த பிரமாண்டமான கட்டுமான ஏற்றம்: அதிர்ச்சி வீடியோ

வங்கக்கடலில் உருவான ஃபானி புயல் இன்று காலை 8 மணி அளவில் ஒடிஷா மாநிலத்தை கடந்து சென்றதால் அம்மாநிலத்தில் வரலாறு காணாத சேதம் ஏற்பட்டுள்ளது. இந்த சேதத்தை கணக்கிடவே பல நாட்கள் ஆகும் என்று கூறப்படுகிறது.

இந்த நிலையில் ஃபானி புயல் கரையை கடந்தபோது புவனேஷ்வர் நகரில் எய்ம்ஸ் மருத்துவமனையின் புதிய கட்டிடம் கட்டும் பணிக்கு பயன்படுத்தப்பட்ட பிரமாண்டமான உயரத்தில் இருந்த கட்டுமான ஏற்றம் ஒன்று காற்றின் சீற்றத்தால் நிலைகுலைந்து குடியிருப்பு பகுதியில் விழுந்த வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இந்த ஏற்றம் விழுந்ததால் ஏற்பட்ட சேதம் குறித்த தகவல்கள் இன்னும் வெளிவரவில்லை.

மேலும் ஃபானி புயலால் ஒடிஷாவில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையின் கூரை காற்றில் பறந்ததாகவும், இதனையடுத்து அந்த மருத்துவமனையில் உள்ள நோயாளிகள், மருத்துவர்கள் பாதுகாப்பான பகுதிக்கு அழைத்து செல்லப்பட்டதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது. அதேபோல் புவனேஷ்வர் ரயில் நிலையத்தின் மேற்கூரைகளும் பயங்கர சேதம் அடைந்துள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக புவனேஷ்வர் வழியாக செல்லும் 200 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

More News

விஜய் படத்தை அடுத்து சிரஞ்சீவி படத்திற்கும் ஏற்பட்ட சோகம்!

தளபதி விஜய் நடித்து வரும் 'தளபதி 63' படத்தின் படப்பிடிப்புக்காக சென்னை பின்னி மில்லில் அமைக்கப்பட்டிருந்த செட்டில் நேற்று தீவிபத்து ஏற்பட்டு லட்சக்கணக்கான மதிப்புடைய பொருட்கள் தீயில் எரிந்து நாசமான

பிறந்த நாள் கொண்டாட்டத்தில் சரமாரி அடி-உதை: விளையாட்டால் உயிர் போன பரிதாபம்!

இந்த தலைமுறையினர்களின் கலாச்சாரங்களில் ஒன்று பிறந்த நாள் கொண்டாட்டத்தின்போது 'பர்த்டே பம்ப்ஸ்' செய்வது. அதாவது பிறந்த நாள் கொண்டாடும் நபரை சுற்றி நின்று அவருடைய நண்பர்கள் வெளுத்தெடுப்பதுதான்

'விக்ரம் வேதா' இயக்குனர்களின் அடுத்த பட அறிவிப்பு!

விஜய்சேதுபதி, மாதவன், ஷராதா ஸ்ரீநாத் நடிப்பில் புஷ்கர் காயத்ரி இயக்கிய 'விக்ரம் வேதா' திரைப்படம் கடந்த 2017ஆம் ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றது.,

திமுகவுக்கு திடீர் ஆதரவு கொடுத்த கமல்ஹாசன்

நடைபெற்று முடிந்த மக்களவை மற்றும் 18 சட்டமன்ற இடைத்தேர்தலில் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சி தனித்து போட்டியிட்ட நிலையில் தேர்தல் பிரச்சார கூட்டங்களில் அதிமுகவை

விஜய் ஆண்டனியின் 'கொலைகாரன்' ரிலீஸ் தேதி அறிவிப்பு!

விஜய் ஆண்டனி, அர்ஜூன் இணைந்து நடித்த 'கொலைகாரன்' திரைப்படத்தின் ரிலீஸ் தேதி விரைவில் அறிவிக்கப்படும் என்று கூறப்பட்ட நிலையில் சற்றுமுன் வெளியான அந்த படத்தின் புரமோஷன் வீடியோவில்