close
Choose your channels

'விக்ரம் வேதா' இயக்குனர்களின் அடுத்த பட அறிவிப்பு!

Friday, May 3, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

விஜய்சேதுபதி, மாதவன், ஷராதா ஸ்ரீநாத் நடிப்பில் புஷ்கர் காயத்ரி இயக்கிய 'விக்ரம் வேதா' திரைப்படம் கடந்த 2017ஆம் ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றது., இந்த படத்தை அடுத்து இயக்குனர்கள் புஷ்கர் காயத்ரி அடுத்த படத்தை இயக்க திட்டமிட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் புஷ்கர் காயத்ரி ஆரம்பித்துள்ள புதிய தயாரிப்பு நிறுவனமான 'வால் வாட்சர் பிலிம்ஸ் என்ற நிறுவனத்தின் முதல் தயாரிப்பு திரைப்படம் குறித்த தகவல் வெளிவந்துள்ளது. வால் வாட்சர் பிலிம்ஸ் நிறுவனம் ஒய்நாட் மற்றும் ரிலையன்ஸ் நிறுவனங்களுடன் இணைந்து தயாரிக்கும் இந்த திரைப்படத்திற்கு 'ஏலே' என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளது.

ஹலிதா ஷமீம் இயக்கவுள்ள இந்த படத்திற்கு தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவும், கபீர் வாசுகி இசையும், ரெய்மண்ட் டெர்ரிக் கிராஸ்டா படத்தொகுப்பு பணிகளை செய்யவுள்ளனர். இந்த படத்தில் சமுத்திரக்கனி மற்றும் மணிகண்டன் முக்கிய வேடத்தில் நடிக்கவுள்ளனர். மற்ற நடிகர் நடிகை தேர்வு நடைபெற்று வருகிறது

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.