70-75 அடி ஆழத்திற்கு சுரங்கம்; சுர்ஜித்தை மீட்க அடுத்த முயற்சி

  • IndiaGlitz, [Saturday,October 26 2019]

திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே இரண்டு வயது குழந்தையான சுர்ஜித் ஆழ்துளை கிணற்றில் நேற்று மாலை கீழே விழுந்த நிலையில், அந்த குழந்தையை மீட்க கடந்த பல மணி நேரமாக தேசிய மீட்பு படையினர் தீவிரமாக முயற்சித்து வருகின்றனர்

இந்த நிலையில் குழந்தையை மீட்கும் புதிய முயற்சியாக மஞ்சம்பட்டி குழுவினர் கருவி ஒன்றை பயன்படுத்தி குழந்தையின் தலையை கவ்வி பிடித்ததாகவும் இதனை அடுத்து விரைவில் குழந்தை மீட்கப்பட வாய்ப்பு இருப்பதாகவும் தகவல்கள் வெளிவந்தன

இந்த திட்டம் சக்சஸ் ஆனதா? என்பது இன்னும் தெரியவில்லை. இருப்பினும் அடுத்த முயற்சியாக குழந்தை விழுந்த கிணறு அருகே ஆள் இறங்கும் அளவிற்கு சுரங்கம் தோண்ட தேசிய மீட்பு படையினர் முடிவு செய்துள்ளனர். இந்த சுரங்கத்தில் ஒரு ஆள் இறங்கி குழந்தை இருக்கும் கிணறுக்கும் இந்த சுரங்கத்திற்கும் இடையே ஒரு பாதையை ஏற்படுத்தி அதன் மூலம் குழந்தையை வெளியே கொண்டுவர தேசிய மீட்பு படையினர் திட்டமிட்டுள்ளனர்

இந்த சுரங்கம் ஒரு மீட்டர் தொலைவில் 70 முதல் 75 அடி ஆழத்திற்கு தோண்டப்படும் என தெரிகிறது. இந்த திட்டமானது வெற்றிபெற்று நல்லபடியாக குழந்தையை மீட்கப்பட வேண்டும் என்று அனைவரும் பிரார்த்தனை செய்து வருகின்றனர்

More News

ஆழ்துளை கிணற்றில் விழுந்த சுர்ஜித் குறித்து லதா ரஜினிகாந்த்!

திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே 2 வயது குழந்தை சுர்ஜித் ஆழ்துளை கிணற்றில் விழுந்து சரியாக 24 மணி நேரம் முடிந்துவிட்டது. நேற்று மாலை 5.30க்கு ஆழ்துளை கிணற்றில்

ரசிகர்களுக்கு 'தர்பார்' படக்குழுவினர் கொடுத்த தீபாவளி கிஃப்ட்

Darbar Deepavali Wishes poster

குழந்தை தலையை கவ்விப்பிடித்த கருவி: சில நிமிடங்களில் மீட்க வாய்ப்பு

மணப்பாறை அருகே உள்ள ஒரு கிராமத்தில் சுஜித் இந்த இரண்டு வயது குழந்தை நேற்று மாலை தவறி விழுந்த நிலையில் கிட்டத்தட்ட 22 மணி நேரமாக அந்த குழந்தையை மீட்க மீட்பு குழுவினர்கள் போராடி வருகின்றனர் 

சுர்ஜித் வெளியே வருவான்: மீட்புப் பையைத் தைக்கும் தாய்

திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே சுர்ஜித் என்ற 2 வயது குழந்தை ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்து விட்டது. கடந்த இருபது மணி நேரமாக அந்த குழந்தையை காப்பாற்ற

விண்வெளி செயற்கைக்கோள் தேவையா? முதலில் குழந்தையை மீட்டெடுங்கள்: சீமான்

ஆயிரக்கணக்கான கோடிகள் செலவு செய்து விண்வெளிக்கு செயற்கைக் கோளை அனுப்புவதைவிட ஆழ்துளை கிணற்றில் விழுந்த குழந்தைகளை மீட்பதற்கு தேவையான கருவிகள் கண்டு பிடிப்பது முக்கியம்