பூகம்பத்தின் போது குடும்பத்துடன் ஜப்பானில் இருந்த பிரபல நடிகர்.. என்ன ஆச்சு?

  • IndiaGlitz, [Tuesday,January 02 2024]

ஜப்பானில் நேற்று பயங்கரமான நிலநடுக்கம் ஏற்பட்ட நிலையில் பிரபல நடிகர் தனது குடும்பத்துடன் ஜப்பானில் தான் இருந்ததாக தகவல் வெளியாகி உள்ள நிலையில் அவருக்கு என்ன ஆச்சு?என்று ரசிகர்கள் கவலை அடைந்துள்ளனர்.

ஜப்பான் நாட்டில் நேற்று திடீரென அடுத்தடுத்து 150-க்கும் மேற்பட்ட நிலநடுக்கங்கள் ஏற்பட்டது என்பதும் இதனால் சுனாமி எச்சரிக்கையும் விடப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் ’ஆர்.ஆர்.ஆர்’ உள்பட பல வெற்றி திரைப்படங்களை நடித்த ஜூனியர் என்டிஆர் தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டை கொண்ட ஜப்பான் சென்று இருந்தார்.

இந்த நிலையில் ஜப்பானில் நிலநடுக்கம் ஏற்பட்டபோது குடும்பத்துடன் அங்கே இருந்த ஜூனியர் என்டிஆர் தற்போது ஹைதராபாத் திரும்பி உள்ளார். இதனை அடுத்து சற்று முன் அவர் தனது சமூக வலைத்தளத்தில் ’ஜப்பானிலிருந்து இன்றுதான் வீடு திரும்பினேன், ஜப்பானில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் நான் அதிர்ச்சி அடைந்தேன். கடந்த வாரம் முழுவதும் நான் என் குடும்பத்தோடு அங்கே தான் இருந்தேன். பாதிக்கப்பட்ட மக்கள் விரைவில் பாதிப்பில் இருந்து மீண்டு வருவார்கள் என்று நம்புகிறேன். ஜப்பான் மக்களே வலிமையாக இருங்கள்’ என்று பதிவு செய்துள்ளார்.

ஜப்பானில் இருந்து ஜூனியர் என்டிஆர் மற்றும் அவரது குடும்பத்தினர் பாதுகாப்பாக வீடு திரும்பியதையடுத்து அவரது ரசிகர்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.

More News

பகத் பாசில் - வடிவேலு படத்தின் கதை இதுதான்.. வடிவேலு ஜோடியாகும் 90களின் பிரபல நாயகி..!

மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவான 'மாமன்னன்' திரைப்படத்தில் பகத் பாசில் மற்றும் வடிவேலு இணைந்து நடித்த நிலையில் மீண்டும் இருவரும் இணைந்து நடிக்கும் படம் குறித்த அறிவிப்பு சமீபத்தில் வெளியானது என்பதை

சென்னை நேரு ஸ்டேடியத்தில் தனுஷின் 'கேப்டன் மில்லர்' விழா.. சத்யஜோதி பிலிம்ஸ் அறிவிப்பு..!

சென்னை நேரு ஸ்டேடியத்தில் 'கேப்டன் மில்லர்' படத்தின் பிரி ரிலீஸ் விழா நாளை நடத்தப்படும் என சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

கரும்பலகையில் இருந்த ஹிந்தியை மட்டும் அழித்த கீர்த்தி சுரேஷ்.. வைரல் வீடியோ..!

கீர்த்தி சுரேஷ் நடித்து முடித்துள்ள 'ரகு தாத்தா' என்ற திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து விரைவில் ரிலீசாக இருக்கும் நிலையில் இந்த படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோ வெளியாகி இணையத்தில் வைரல் ஆகி வருகிறது

என்னை யூஸ் பண்ணி கசக்கி தூக்கி போட்டுட்டிங்க.. பூர்ணிமா குற்றஞ்சாட்டுவது யாரை?

 என்னை யூஸ் பண்ணி கசக்கி தூக்கி போட்டு விட்டீர்கள் என பூர்ணிமா சக போட்டியாளர் ஒருவரை குற்றம் சாட்டும் வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

ஆவலுடன் எதிர்பார்த்த பணப்பெட்டி டாஸ்க்.. உயர்ந்து கொண்டே போகும் தொகை.. இந்த சீசனில் எடுப்பது யார்?

பிக் பாஸ் நிகழ்ச்சி ஒவ்வொரு சீசனிலும் இறுதி கட்டத்தை நெருங்கும் நிலையில் பணப்பெட்டி டாஸ்க் வைக்கப்படும் என்பதும் அதில் குறிப்பிட்ட பணத்தை எடுத்துக்கொண்டு ஒரு போட்டியாளர் தாங்களாகவே வெளியேறி விடுவார்