close
Choose your channels

தீபாவளிக்கு ரிலீஸ் ஆகும் பிரபல இயக்குனரின் அடுத்த படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!

Monday, May 15, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தமிழ் திரை உலகின் முன்னணி இயக்குனரின் அடுத்த திரைப்படம் வரும் தீபாவளி அன்று வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இது குறித்த வீடியோவும் இணையதளங்களில் வைரல் ஆகி வருகிறது

’பீட்சா’ என்ற திரைப்படத்தின் மூலம் தமிழில் இயக்குனராக அறிமுகமாகி அதன் பின் சூப்பர் ஸ்டார் ரஜினியின் ’பேட்ட’ உள்பட பல வெற்றி திரைப்படங்களை இயக்கியவர் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ். இவரது இயக்கத்தில் உருவான ’ஜிகர்தண்டா’ என்ற படத்தின் இரண்டாம் பாகத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் சற்றுமுன் இந்த படம் வரும் தீபாவளி அன்று ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ், தெலுங்கு மற்றும் ஹிந்தி ஆகிய மூன்று மொழிகளில் வெளியாக இருக்கும் இந்த படத்தில் ராகவா லாரன்ஸ், எஸ் ஜே சூர்யா உள்பட பலர் நடித்துள்ளனர். சந்தோஷ் நாராயணன் இசையில், திருநாவுக்கரசு ஒளிப்பதிவில், சபிக் முகமது அலி படத்தொகுப்பில் உருவான இந்த படத்தை ஸ்டோன் பெஞ்ச் நிறுவனம் தயாரித்துள்ளது

ஏற்கனவே தீபாவளி தினத்தில் சிவகார்த்திகேயனின் ‘அயலான்’ வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கார்த்தியின் ‘ஜப்பான்’ உள்ளிட்ட சில படங்கள் தீபாவளி தினத்தில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் தற்போது ’ஜிகர்தண்டா’ படத்தின் இரண்டாம் பாகம் வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment