பிரபாஸ் படத்தின் வில்லனாகும் பிரபல ஹீரோ!

  • IndiaGlitz, [Wednesday,March 09 2022]

தென்னிந்திய திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவரான பிரபாஸ் நடிக்கும் அடுத்த படத்தில் பிரபல ஹீரோ ஒருவர் வில்லனாக நடிக்க உள்ளார் என்ற செய்தி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தென்னிந்திய திரையுலகின் முன்னணி ஹீரோக்களான விஜய் சேதுபதி, பகத் பாசில் உள்பட ஒருசிலர் தற்போது வில்லன்களாகவும் அவதாரம் எடுத்து வருகின்றனர் என்பதை பார்த்து வருகிறோம்.

அந்த வகையில் பிரபாஸ் நடித்துவரும் திரைப்படங்களில் ஒன்றான ’சலார்’ என்ற படத்தில் பிரபல ஹீரோ பிரித்விராஜ் சுகுமாரன் வில்லனாக நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த படம் இரண்டு பகுதிகளாக உருவாக்கப்பட்டு வருவதாகவும் முதல் பகுதி மட்டும் 150 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவாக்கப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.

பிரசாந்த் நீல் இயக்கத்தில் ரவி பஸ்ருர் இசையில் உருவாகி வரும் இந்தப் படத்தில் பிரபாஸ், சுருதிஹாசன், பிரித்விராஜ் சுகுமாரன், ஜெகபதி பாபு உள்பட பலர் நடித்து வருகின்றனர். இந்த படம் இந்த ஆண்டு இறுதியில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

More News

சொல்லி வைத்து அடித்த ஷேன் வார்னே… உயிரிழப்புக்குப் பின் வைரலாகும் வீடியோ!

லெக் ஸ்பின் பந்துவீச்சால் உலக ரசிகர்களை கட்டிப்போட்டு வைத்திருந்தவர் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் ஷேன் வார்னே.

பலூன் விற்கும் சிறுமி மாடலாக மாறிய அதிசயம்… நெகிழ்ச்சியில் வைரலாகும் புகைப்படம்!

ஒரு புகைப்படம் ஒருவரது வாழ்க்கையை ஒட்டுமொத்தமாக மாற்றிவிடும் என்பதற்கு மிகச் சிறந்த உதாரணமாக மாறியிருக்கிறார்

ஆனந்த யாழை மீட்டுகிறாய்… நெட்டிசன்களின் மனதைத் தொட்ட பிரபல பாடகரின் வைரல் வீடியோ!

தென்னிந்திய சினிமாவில் முன்னணி பாடகராக வலம்வரும் உன்னி கிருஷ்ணன் தனது செல்ல மகளுடன் இருக்கும் வீடியோவை

முதன்முதலில் ரஜினிக்கு மன்றம் ஆரம்பித்த ரசிகர் காலமானார்:

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களுக்கு முதன்முதலில் மன்றம் ஆரம்பித்த ரசிகர் காலமானார் என்ற செய்தி ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியாக உள்ளது. 

கருப்பு காஸ்ட்யூமில் கவிதையாய் 'குக் வித் கோமாளி' கனி: வைரல் புகைப்படங்கள்!

 'குக் வித் கோமாளி' சீசன் 2 வின்னர் கனி, தனது சமூக வலைத்தளத்தில் மகளிர் தின வாழ்த்துக்களை கூறி பதிவு செய்துள்ள போட்டோஷூட் புகைப்படங்கள் வைரல் ஆகி வருகின்றன.