close
Choose your channels

பிரபாஸ் படத்தின் வில்லனாகும் பிரபல ஹீரோ!

Wednesday, March 9, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தென்னிந்திய திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவரான பிரபாஸ் நடிக்கும் அடுத்த படத்தில் பிரபல ஹீரோ ஒருவர் வில்லனாக நடிக்க உள்ளார் என்ற செய்தி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தென்னிந்திய திரையுலகின் முன்னணி ஹீரோக்களான விஜய் சேதுபதி, பகத் பாசில் உள்பட ஒருசிலர் தற்போது வில்லன்களாகவும் அவதாரம் எடுத்து வருகின்றனர் என்பதை பார்த்து வருகிறோம்.

அந்த வகையில் பிரபாஸ் நடித்துவரும் திரைப்படங்களில் ஒன்றான ’சலார்’ என்ற படத்தில் பிரபல ஹீரோ பிரித்விராஜ் சுகுமாரன் வில்லனாக நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த படம் இரண்டு பகுதிகளாக உருவாக்கப்பட்டு வருவதாகவும் முதல் பகுதி மட்டும் 150 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவாக்கப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.

பிரசாந்த் நீல் இயக்கத்தில் ரவி பஸ்ருர் இசையில் உருவாகி வரும் இந்தப் படத்தில் பிரபாஸ், சுருதிஹாசன், பிரித்விராஜ் சுகுமாரன், ஜெகபதி பாபு உள்பட பலர் நடித்து வருகின்றனர். இந்த படம் இந்த ஆண்டு இறுதியில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.