close
Choose your channels

'லெஜண்ட்' சரவணன் 2வது படத்தில் இணையும் பிரபலம் இவரா? சூப்பர் தகவல்..!

Sunday, February 11, 2024 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

’லெஜண்ட்’ சரவணன் நடித்த ’லெஜண்ட்’ என்ற திரைப்படம் கடந்த 2022 ஆம் ஆண்டு வெளியான நிலையில் இந்த படம் திரையரங்கில் சுமாரான வெற்றியை பெற்றாலும் ஓடிடியில் நல்ல வரவேற்பு பெற்றது என்பதும் மொத்தத்தில் இந்த படம் வெற்றிபடம் என்றே கூறப்பட்டது.

இந்த நிலையில் லெஜெண்ட் சரவணன் நடிக்கும் இரண்டாவது படம் குறித்த தகவல்கள் தற்போது வெளிவந்து கொண்டிருக்கின்றன என்பதை பார்த்து வருகிறோம். குறிப்பாக இந்த படத்தை தனுஷ் நடித்த ’கொடி’ சிவகார்த்திகேயன் நடித்த ’எதிர்நீச்சல்’ உட்பட சில படங்களை இயக்கிய துரை செந்தில்குமார் இயக்க இருப்பதாக கூறப்படுகிறது.

தற்போது அவர் சூரி நடித்து வரும் ’கருடன்’ என்ற படத்தை இயக்கி வரும் துரை செந்தில்குமார், இந்த படத்தை மார்ச் இறுதியில் வெளியிட திட்டமிட்டுள்ளார். அதேபோல் ராகவா லாரன்ஸ் நடித்து வரும் ’அதிகாரம்’ என்ற படத்தையும் அவர் இயக்கி வரும் நிலையில் இந்த இரண்டு படங்களை முடித்துவிட்டு அவர் ’லெஜண்ட்’ சரவணன் படத்தை தொடங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் ’லெஜண்ட்’ சரவணன் நடிப்பில் துரை செந்தில்குமார் இயக்கத்தில் உருவாகும் படத்திற்கு ஜிப்ரான் இசையமைக்க இருப்பதாக கூறப்படுகிறது. ’லெஜண்ட்’ படத்தில் ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்த நிலையில் இந்த படத்திற்கு ஜிப்ரான் இசையமைக்க இருப்பதாக செய்திகள் வெளியாகி உள்ளன. அதேபோல் இன்னும் இந்த படத்தில் எந்தெந்த பிரபலங்கள் இணைவார்கள்? எந்தெந்த தொழில்நுட்ப கலைஞர்கள் இணைவார்கள்? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment