close
Choose your channels

வெற்றிமாறனின் 'விடுதலை 2' படத்தில் கேமியோ கேரக்டரில் பிரபல நடிகர்.. வேற லெவல் தகவல்..!

Friday, May 17, 2024 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகி வரும் ‘விடுதலை 2’ படத்தில் ஏற்கனவே சில பிரபலங்கள் சமீபத்தில் இணைந்ததாக தகவல் வெளியான நிலையில் தற்போது இன்னொரு மாஸ் நடிகரும் கேமியோ கேரக்டரில் இணைவதாக கூறப்படுகிறது.

வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி மற்றும் விஜய் சேதுபதி நடித்த ’விடுதலை’ திரைப்படம் கடந்த ஆண்டு மார்ச் மாதம் வெளியான நிலையில் இந்த படத்தின் இரண்டாம் பாகம் கடந்த ஆண்டு இறுதியில் வெளியாகும் என்று கூறப்பட்டது. ஆனால் தற்போது வரை ‘விடுதலை 2’ படத்தின் படப்பிடிப்பு தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் இந்த ஆண்டு இறுதியில் தான் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் இந்த படத்தில் ஏற்கனவே ஒரு சில பிரபலங்கள் இணைந்தார்கள் என்பதும் குறிப்பாக ராஜீவ் மேனன் இரண்டாம் பாகத்தில் இணைந்ததாகவும் கூறப்பட்டது. இதையடுத்து தற்போது வந்துள்ள தகவல் படி இந்த படத்தில் எஸ்ஜே சூர்யா ஒரு முக்கிய கேரக்டரில் நடிக்க இருப்பதாகவும் அவரது காட்சிகளின் படப்பிடிப்பு சமீபத்தில் படமாக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. சமீப காலமாக எஸ்ஜே சூர்யா நடிக்கும் படம் அனைத்தும் சூப்பர் ஹிட் ஆகி வரும் நிலையில் இந்த படமும் மிகப்பெரிய வெற்றி பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சூரி, விஜய் சேதுபதி, பவானி ஸ்ரீ, பிரகாஷ் ராஜ் ,கௌதம் மேனன், ராஜீவ் மேனன், இளவரசு, பாலாஜி சக்திவேல் உள்பட பலர் நடிப்பில் உருவாகும் இந்த படத்திற்கு இசைஞானி இளையராஜா இசையமைத்து வருகிறார். வேல்ராஜ் ஒளிப்பதிவில், ராமர் படத்தொகுப்பில் உருவாகி வரும் இந்த படம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment