close
Choose your channels

'வேட்டையன்' படத்தில் மாஸ் இண்ட்ரோ பாடல்.. 'அண்ணாமலை' 'பாட்ஷா' ரேஞ்சுக்கு இருக்குமா?

Thursday, April 11, 2024 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கடந்த சில ஆண்டுகளாக வெளிவரும் சூப்பர் ஸ்டார் ரஜினியின் படங்களில் இண்ட்ரோ பாடல்கள் இல்லாமல் இருப்பது ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை தந்து வருகிறது. ‘அண்ணாமலை’ ‘பாட்ஷா’ போன்ற படங்களில் ரஜினியின் இண்ட்ரோ பாடல் மாஸ் ஆக இருக்கும் நிலையில் சமீபகாலமாக இண்ட்ரோ பாடல் இல்லாத ரஜினி படங்கள் தான் வந்து கொண்டிருக்கின்றன.

ரஜினி படம் என்றாலே முதலில் இண்ட்ரோ பாடல் இருக்கும் என்ற நிலையில் கடந்த சில ஆண்டுகளாக ரசிகர்களின் ஏமாற்றத்தை போக்கும் வகையில் ’வேட்டையன்’ படத்தில் ஒரு மாஸ் இண்ட்ரோ பாடல் இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த பாடலின் படப்பிடிப்பு வரும் 25ஆம் தேதி முதல் நடைபெற உள்ளதாகவும் இதற்காக பிரமாண்டமான செட் போடப்பட்டு உள்ளதாகவும் கூறப்படுகிறது. மேலும் இந்த பாடலுக்கு தினேஷ் மாஸ்டர் நடன இயக்குனராக பணிபுரிய இருப்பதாகவும் ஏராளமான நடன கலைஞர்கள் இந்த பாடலில் பங்கேற்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது ஈசிஆர் பகுதியில் நடைபெற்று வருவதாகவும் ரஜினிகாந்த் மற்றும் ராணா டகுபதி சம்பந்தப்பட்ட காட்சிகள் படப்பிடிப்பு நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது.

வரும் அக்டோபர் மாதம் இந்த படம் வெளியாகும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் படப்பிடிப்பு மற்றும் தொழில்நுட்ப பணிகளும் அதை நோக்கி சென்று கொண்டிருக்கிறது.

ரஜினிகாந்துடன் அமிதாப்பச்சன், பகத் பாசில், ராணா ரகுபதி, மஞ்சு வாரியர், ரித்திகா சிங், துஷாரா விஜயன், கிஷோர், ரோகிணி, ரமேஷ் திலக் ,ஜிஎம் சுந்தர் உள்பட பலர் இந்த படத்தில் நடித்துள்ளனர். அனிருத் இசையில், ஞானவேல் இயக்கத்தில் உருவாகும் இந்த படத்திற்கு எஸ்ஆர் கதிர் ஒளிப்பதிவும், பிலோமின் ராஜ் படத்தொகுப்பு பணியை செய்து வருகின்றனர். இந்த படத்தின் படப்பிடிப்பு இன்னும் ஒரு சில வாரங்களில் நிறைவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment