close
Choose your channels

பிரபாஸின் 'சலார்' படத்தின் மாஸ் அப்டேட்.. ரசிகர்கள் உற்சாகம்..!

Monday, July 3, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சமீபத்தில் பிரபாஸ் நடித்த ‘ஆதிபுருஷ்’ என்ற திரைப்படம் கலவையான விமர்சனம் பெற்ற நிலையில் அவர் நடித்து வரும் ‘சலார்’ என்ற திரைப்படம் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது தொழில்நுட்ப பணிகள் நடைபெற்று வருவதாகவும் இந்த படம் வரும் செப்டம்பர் 28ஆம் தேதி வெளியாகும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டு உள்ளது என்பதும் தெரிந்ததே.

ரூபாய் 200 கோடி பட்ஜெட்டில் பிரம்மாண்டமாக எடுக்கப்பட்டுள்ள இந்த படம் ’பாகுபலி’க்கு பிறகு பிரபாஸின் வெற்றி படமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் ‘சலார்’ படத்தின் டீசர் வரும் 6ஆம் தேதி அதிகாலை 5.12 மணிக்கு வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது . பிரபாஸ் ஜோடியாக ஸ்ருதிஹாசன் நடித்து வரும் இந்த படத்தில் பிரித்திவிராஜ் சுகுமாரன் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.

மேலும் ஜெகபதி பாபு, மது குருசாமி, ஈஸ்வரி ராவ் உட்பட பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு ரவிபஸ்ருர் இசையமைத்துள்ளார். இந்த படத்தை ’கேஜிஎப்’ படத்தை இயக்கிய பிரசாந்த் நீல் இயக்கி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment