close
Choose your channels

விஷ்ணு விஷால் குடும்பத்தில் இருந்து இன்னொரு நடிகர்.. ஜெமினி கணேசன் பாடல் தான் டைட்டில்..!

Monday, February 12, 2024 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தமிழ் திரையுலகில் இளைய தலைமுறை நடிகர்களில் ஒருவரான விஷ்ணு விஷாலின் குடும்பத்தில் இருந்து இன்னொரு நடிகர் திரையுலகிற்கு அறிமுகமாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளதோடு இந்த படத்தின் டைட்டில் லுக் போஸ்டர் வெளியாகி உள்ளது.

சுசீந்திரன் இயக்கத்தில் உருவான ’வெண்ணிலா கபடி குழு’ என்ற திரைப்படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானவர் விஷ்ணு விஷால். அதன் பின்னர் அவர் ’நீர்ப்பறவை’ ’முண்டாசுப்பட்டி’ ‘எப்.ஐ.ஆர்’ உள்பட பல திரைப்படங்களில் நடித்த நிலையில் சமீபத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினியுடன் ’லால்சலாம்’ என்ற படத்தில் நடித்திருந்தார் என்பதும் இந்த படம் கடந்த வாரம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது என்பதையும் பார்த்தோம்

இந்த நிலையில் ஏற்கனவே விஷ்ணு விஷால் தமிழ் திரை உலகில் பிஸியாக இருக்கும் நிலையில் தற்போது அவரது சகோதரர் ருத்ரா என்பவரையும் திரையுலகத்திற்கு அறிமுகப்படுத்தி உள்ளார். விஷ்ணு விஷால் ஸ்டூடியோஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு ’ஓஹோ எந்தன் பேபி’ என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. ஜெமினி கணேசன் நடித்த ‘தேன் நிலவு’ படத்தில் இடம்பெற்ற பாடலின் முதல் வரி தான் இந்த டைட்டில் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த படத்தை அறிமுக இயக்குனர் கிருஷ்ணகுமார் ராமகுமார் என்பவர் இயக்க இருப்பதாகவும், தர்புகா சிவா இந்த படத்திற்கு இசையமைக்க இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. விஷ்ணு விஷால் போலவே அவரது சகோதரர் ருத்ராவும் தமிழ் திரை உலகில் வெற்றிகரமான நடிகராக வலம் வருவாரா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment